அமெரிக்காவிலிருந்து நவீன ரக துப்பாக்கிகள் வாங்க இந்தியா ஒப்பந்தம்!

அமெரிக்காவிலிருந்து நவீன ரக துப்பாக்கிகள் வாங்க இந்தியா ஒப்பந்தம்!

ரூ.700 கோடியில் 72,400 நவீன அரக துப்பாக்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்திய இன்று கையெழுத்திட்டுள்ளது என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள, தமிழகத்தின் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் தயாரிக்கப்பட்ட, இன்சாஸ் ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக, இந்த நவீன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

மேற்கு வங்க மாநிலம், இஷார்புரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை வடிவமைத்த, ரைபிள், சோதனை யின்போது தோல்வி அடைந்தது. அதையடுத்து, உடனடி தேவைக்காக, வெளிநாடுகளில் இருந்து இந்த ரக துப்பாக்கிகள் வாங்க, ராணுவ அமைச்சகம் திட்டமிட்டது. ராணுவத்தை நவீனப் படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தற்போது இந்திய ராணுவத்திற்கு 7 லட்சம் தாக்குதல் துப்பாக்கிகள் தேவை.  அதை அடுத்து அமெரிக்காவிடம் இருந்து 72,400 புதிய துப்பாக்கிகளை மட்டுமே வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த பிப்ரவரி 2ம் தேதி முடிவு செய்தது.

லேட்டஸ்டாக ராணுவத்தினர் பயன்படுத்தும் சிக் சார் 716 (Sig Sauer) ரக புதிய துப்பாக்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

எல்லையோர பகுதியில் இருக்கும் பல நாடுகளின் ராணுவ வீரர்கள் பயண்படுத்தக்கூடியதாகும். இது சீனாவுடனான சுமார் 3,600 கி.மீ .தொலைதூரம் வரை பயன்படுத்தப்படும்.

சிக் சார் ரக துப்பாக்கிகள் இதற்கு முன்பு அமெரிக்கப் படைகளாலும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளாலும் பயன்படுத்தப்பட்டதாகும்.

இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து 72,400 புதிய துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ரூ.700 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான இன்றிலிருந்து  ஒரு வருடத்திற்குள் அமெரிக்க நிறுவனம் துப்பாக்கிகளை வழங்கும் என இந்த ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

Related Posts

error: Content is protected !!