வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை 7 நாள் தனிமைப்படுத்தும் அவசியம் இல்லை என இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் சிறிய மாற்றம் செய்து, இந்திய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை, இம்மாதம் 14-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒமைக்ரான் கண்டறியப்பட்டபோது அமலான கொரோனா ஆபத்து அதிகமுள்ள நாடுகள் பட்டியல் இன்று நீக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ஏழு நாள்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது. அதற்கு பதிலாக, 14 நாள்கள் வரை தங்களை, சுயமாக கண்காணித்து கொள்ள வேண்டும் என வெளிநாட்டு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளில் 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறையில், ரேண்டம் அடிப்படையில் பரிசோதனைகள் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பரிசோதனை மாதிரிகள் கொடுத்த பின்னரே விமான நிலையத்தை விட்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்த வழிகாட்டு நெறிமுறையில் சொல்லப்பட்டுள்ளது.

ஒருவேளை அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த மாதிரிகளை மேற்பகுப்பாய்வுக்காக அனுப்பப்ப வேண்டும எனவும், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் உடல்நிலையை 14 நாட்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!