August 13, 2022

கிரிக்கெட் : இந்தியா வெஸ்ட்ண்டீசை 125 ரன்னில் வீழ்த்தியது!

உலக கோப்பை போட்டியின்  இந்த தொடரில் இந்திய அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காத நிலையில் தனது 5வது வெற்றியை பதிவு செய்தது இந்த முறை வெஸ்ட்ண்டீசை 125 ரன்னில் வீழ்த்தியது. கேப்டன் கோஹ்லி, தோனி அரைசதம் அடித்தனர். பந்துவீச்சில் மிட்டிய முகமது ஷமி 4 விக்கெட் சாய்த்தார்.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், உலகின் ‘டாப்&10’ அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரின் 34வது லீக் ஆட்டம் மான்செஸ்டரின் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நேற்று நடைந்தது. இதில், முன்னாள் சாம்பியன்களான இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  இப்போட்யில் வெற்றி பெற்றால் இந்தியா வின் அரைஇறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிடும் என்ற நிலை இருந்தது. அதே நேரம் அரைஇறுதி வாய்ப்பை தவறவிட்ட வெஸ்ட்ண்டீஸ் அணிக்கு இப்போட்டி ஒரு சம்பிரதாய ஆட்டமாக அமைந்தது. இதனால், விண்டீஸ் வீரர்களுக்கு எவ்வித நெருக்கடியும் இலலாமல் இருந்தது.

மான்செஸ்டரில் கடும் வெயில் அடிக்க ஆட்டம் துங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. விண்டீஸ் அணியில் எவின் லீவிஸ், நர்ஷ் நீக்கப்பட்டு சுனில் அம்ரிஸ், பேபியன் ஆலன் சேர்க்கப் பட்டனர்.

இந்திய அணிக்கு ராகுல், ரோகித் சர்மா இருவரும் துவக்கம் தந்தனர். இந்த தொடரில் முதலாவது ‘பவர்&பிளே’யில் கார்ட்ரல் விக்கெட் வேட்டை நடத்தி வந்ததால் இவரது பந்து வீச்சை இருவரும் பொறுப்புடன் எதிர்கொண்டனர். ஆடடத்தின் 6வது ஓவரை ரோச் வீசினார், இந்த ஓவரில் ஒரு சிக்சர் அடித்த ரோகித் கடைசி பந்தில் விக்கெட்கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதலில் நடுவர் இதை நாட் அவுட் என அறிவிக்க விண்டீஸ் கேப்டன் ஹோல்டர் 3வது நடுவர் உதவியை நாடினர். இதில், பந்து ரோகித் பேட்டில் படாதது தெள்ள தெளிவாக தெரிந்தது. ஆனால் மற்றொரு ரீப்ளேயில் தெளிவாக தெரியவில்லை. இதனால், நாட் அவுட் கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3வது நடுவர் அவுட் என அறிவிக்க ரோகித்திற்கே இது ‘ஷாக்’காக அமைந்தது. ரோகித் 18 ரன் எடுத்தார்.

அடுத்து ராகுலுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். கோஹ்லி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த ராகுல், பொறுமைகாத்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில், ஹோல்டர் பந்தில் ராகுல் கிளீன் போல்டாகி அரைசத வாய்ப்பை இழந்தார். இவர் 48 ரன் (64 பந்து, 6 பவுண்டரி) எடுத்தார், விஜய் சங்கர் (14), கேதர் ஜாதவ் (7) சொதப்பினர். இருந்தும் அதிரடியாக விளையாடிய கோஹ்லி, 55 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 37 ரன் எடுத்த போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ரன் கடந்து சாதனை புரிந்தார். இவருடன் இணைந்த தோனி அமை வேகத்தில் விளையாடி ரசிகர்களை எரிச்சலடையச் செய்தார். சர்வதேச போட்டியில் அதிகம் விளையாடி அனுபவம் பெற்ற தோனி, ஒரு சிங்கிள் கூட எடுக்கமுடியாமல் திணறினர். பல பந்துகளை வீண் செய்ய கோஹ்லிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதையும் பொருட்படுத்தாமல் விளையாடி வந்த கோஹ்லி, சற்றும் எதிர்பாராத வகையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 72 ரன் (82 பந்து, 8 பவுண்டரி) எடுத்தார். கோஹ்லி ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 230 ரன்னையாவது எட்டுமா என்ற நிலை இருந்தது. கடைசி கட்டத்தில் தோனி, பாண்ட்யா இணைந்து ஸ்கோரை உயர்த்த போராடினர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்த போது, பாண்ட்யா (46) அவுட்டானார். முகமது ஷமி ‘டக்’ அவுட் டானார். தாமஸ் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 16 ரன்கள் விளாசிய தோனி, அரைசதம் எட்டினார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. தோனி 56 (61 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), குல்தீப் யாதவ் (0) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் தரப்பில் ரோச் 3, கார்ட்ரல், ஹோல்டர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய விண்டீஸ் அணிக்கு முகமது ஷமி வேகத்தில் தொல்லை கொடுத்தார். இவரது பந்தில் கிறிஸ் கெய்ல் (6), ஹோப் (5) ஆட்டமிழந்தனர், சற்றே பொறுப்புடன் விளையாடிய அம்ப்ரிஷ் (31) பாண்ட்யா பந்தில் வெளியேறினார். குல்தீப் ‘சுழலில் நிகோலஸ் பூரன் (28), சகால் பந்தில் கேப்டன் ஹோல்டர் (6) நடையை கட்டினர். சீரான இடைவெளியில் விக்கெட்டு கள் சரிந்ததோடு 98 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து விண்டீஸ் திணறியது. பின் ஹெட்மய ருடன் பிராத்வைட் இணைந்தார். 25வது ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 100 ரன் எடுத்தது.

இந்த நிலையில் பும்ரா பந்து வீச வந்தார். இவரது வேகத்தில் பிராத்வைட் (1), ஆலன் (0) இருவரும் டுத்தடுத்த பந்தில் ஆட்டமிழக்க ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை ரோச் நிராகரித்தார். விண்டீஸ் அதிகம் நம்பியிருந்த ஹெட்மயர் (18) வெளியேற இந்தியாவின் வெற்றி உறுதியானது. சகால் பந்தில் கார்ட்ரல் (10) நடையை கட்டினார். கடைசியாக முகமது ஷமி பந்தில் தாமஸ (6) வெளியேற வெஸ்ட்இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ரோச் 910) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது ஷமி 4 (6.2&0&16&4) விக்கெட் சாய்த்தார். பும்ரா, சகால் தலா 2, குல்தீப், பாண்ட்யா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பேட்டிங்கில் அசத்திய விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு ஆட்டம் (நியூசிலாந்து) ரத்து என மொத்தம் 11 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்தியா தவது 7வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை (ஜூன் 30, பர்மிங்காம்) எதிர்கொள்கிறது.