இலங்கை அகதிகளுக்கு குடியுரிமையா? நோ சான்ஸ் – மத்திய அரசு திட்டவட்டம்!

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமையா? நோ சான்ஸ் – மத்திய அரசு திட்டவட்டம்!

மிழகத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என நீதிமன்றத்தில் இந்திய அரசு தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது

இலங்கையில் போர்ச் சூழலின் நடுவே தங்களது உடைமைகளைக் கைவிட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் ஒரே நோக்கத்துடன் இந்தியாவில் கரையேறிய காலகட்டம், தமிழர் வரலாற்றில் துயரம் படிந்த அத்தியாயம். தொண்ணூறுகளை ஒட்டிய ஆண்டுகளில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த அகதிகள் ஒரே மொழி, ஒரே வாழ்க்கை முறை ஆகியவை அளிக்கும் பாதுகாப்புணர்வின் காரணமாக இங்கேயே தங்கிவிட்டார்கள். இப்போது இலங்கை என்பது அவர்களுக்குப் பெரிதும் இளம் பிராயத்து நினைவுகள் மட்டுமே. இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது தலைமுறையும் உருவாகிவிட்டது. இந்நிலையில் திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்கள், கடந்த 2019-ம் ஆண்டு தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும், குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், புதிதாக விண்ணப்பம் செய்ய வேண்டும் எனவும், அந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர், மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், மத்திய அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். ஆகவே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி, அவர்களுடைய குடியுரிமை தொடர்பான மனுவை பரிசீலிக்குமாறே உத்தரவிட்டுள்ளார். ஒன்று மனுவை பரிசீலித்து குடியுரிமை வழங்குங்கள்; இல்லையெனில் நிராகரியுங்கள். அதற்கு ஏன் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல, திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளது. ஆகவே, தமிழக அரசுக்கு இதுகுறித்து முடிவெடுக்குமாறு உத்தரவிடலாம் என தெரிவித்துள்ளார். அதற்கு நீதிபதிகள், தமிழக அரசின் முடிவாயினும், அது சட்டங்களுக்கு உட்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

error: Content is protected !!