போஸ்டல் டிப்பார்ட்மெண்ட் ஆப் மூலம் மாஸ்க் & மெடிசன் கூட வாங்கலாமே!

போஸ்டல் டிப்பார்ட்மெண்ட் ஆப் மூலம் மாஸ்க் & மெடிசன் கூட வாங்கலாமே!

கொரோனாவின் கொடூர தாக்கத்தை கட்டுப்படுவதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வருமானம் இன்றி வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதனிடையே கொரோனாவின் வீரியம் குறையாத காரணத்தினால் மேலும் சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரிதும் ஏழை எளிய பாமரமக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப் படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அந்த வகையில்ல் இந்திய அஞ்சல் துறை  ,ஏற்கெனவே இந்த லாக் டவுன் காலத்தில் அஞ்சல் துறை சேவைகளில் எந்தவிதமான வீழ்ச்சியும் ஏற்படவில்லை. இதன் ஊழியர்கள் இந்த மனஅழுத்த சூழ்நிலைகளிலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வழக்கமான சேவை களைத் தவிர, மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களுக்கு மருந்துகள் மற்றும் முகக்கவசங்களையும் வழங்கி வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் தபால் சேவைகள், அஞ்சல் வங்கி, சேமிப்பு வங்கி, காப்பீடு, நிதி சேவைகள் என அனைத்து தபால் சேவைகளையும் தடையின்றிப் பெற்ரு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலியின் பெயர் ‘போஸ்ட் இன்ஃபோ‘. இதனைப் பதிவிறக்கம் செய்த பின்பு தேவை யான கோரிக்கையை வெற்றிகரமாக சமர்ப்பித்த பின்னர், கோரிக்கையின் நிலையை அறிய பயனருக்கு ஒரு தனித்துவமான குறிப்பு எண் உருவாக்கப்படும். அதன் பின்னர் மருந்துகள் மற்றும் முகக்கவசங்கள் மக்களின் வீட்டு வாசலிலேயே வழங்கப்படும். ஆண்ட்ராய்டு பயனர் களுக்கான இச்செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

error: Content is protected !!