நம்ம இந்திய மக்கள்தொகை சீனாவை முந்தி விட்டது!

நம்ம இந்திய மக்கள்தொகை சீனாவை முந்தி விட்டது!

லக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சீனா மக்கள் தொகையை குறைக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனால் 2022 இறுதியில் சீனாவை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து விட்டதாக உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்திய மக்கள் தொகை 142.8 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவை விட 50 லட்சம் மக்கள் இந்தியாவில் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகையில் 8.50 லட்சம் குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் நிறைவில் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 17 லட்சத்து 50 ஆயி ரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 லட்சத்து 50 ஆயி ரம் பேர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கதாகும். எண்ணிக்கை குறையும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டாலும், இவ்வளவு விரைவாக அது ஏற்படும் என்பதை சீனா எதிர்பார்க்க வில்லை. 2022 ஆம் ஆண்டில் 95 லட்சத்து 60 ஆயி ரம் குழந்தைகள் பிறந்தன. அதேவேளையில், 1 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரம் இறப்புகள் ஏற்பட்டன.மக்கள் தொகைப் பெருக்கம் பெரிய சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனையாக உரு வெடுத்ததால், ஒரு குழந்தை என்ற கொள்கை களை சீனா அறிமுகப்படுத்தியது. அந்தக் கொள்கைகளை கறாராக நடைமுறைப்படுத்த வும் செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே மக்கள்தொகை நிலையான தன்மைக்கு வந்தது. ஆனால், பெரும் அளவில் குறையும் என்ற நிலை வந்தபோது, குடும்ப அளவைத் தளர்த்தலாம் என்று முடிவெடுத் தார்கள். 2016ஆம் ஆண்டில் இருந்து தளர்த்தி வந்து, 2021 ஆம் ஆண்டில் மூன்று குழந்தை கள் என்று தளர்த்தியுள்ளனர்.

ஆனால், தளர்த்தப்பட்ட கொள்கை பெரும் பலனளிக்கவில்லை. “அதற்கு, சின்ன குடும்பம் என்பதற்கு சீனர்கள் பழகிவிட்டார்கள் என்பதே காரணம்” என்று விக்டோரியாவில் உள்ள ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் சியுஜியான் பெங் கூறுகிறார். எண்ணிக்கை அதிகரித்தால் குடும்பத்திற்கான செலவும் அதிகரிக்கும் என்று பல குடும்பங்கள் கருதியதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். “குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்க இன்னும் கூடுதலாக பலனளிக்கும் கொள்கைகளை சீன அரசாங்கம் கொண்டு வர வேண்டும். இல்லை யென்றால், மக்கள் தொகை மேலும் குறை யும்” என்று சியுஜீயான் பெங் பரிந்துரைக்கிறார்.

இதனிடையே 2022 முதல் 2050க்குள் மக்கள் தொகை அதிகரிக்க உள்ள நாடுகளில் காங்கோ, எகிப்து, தான்சானியா, பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா வரிசையில் இந்தியாவும் உள்ளது. நம் இந்தியா சீனாவை விட 50 லட்சம் மக்கள் தொகையை அதிகம் கொண்டு உள்ளது என்று உலக மக்கள்தொகை ஆய்வு தெரிவித்து உள்ளது. உலக மக்கள்தொகை மதிப்பாய்வின் மதிப்பீடுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் மக்கள்தொகை 141.7 கோடியாக இருந்துள்ள6து, மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு மக்கள்தொகையில் கவனம் செலுத்தும் ஒரு சுயாதீன அமைப்பாகும்.

அவ்வமைப்பின் கணக்கெடுப்படி 30 வயதுக்குட்பட்ட மக்கள்தொகையில் பாதி பேர் இருக்கும் இந்தியா, வரும் ஆண்டுகளில் உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும். இந்தியா இப்போதைக்கு, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு ஆகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. ஒரு சந்தையாக, இந்தியா, அதன் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்துடன், சர்க்கரையின் மிகப்பெரிய நுகர்வோர் ஆகும், அதே நேரத்தில் சமையல் எண்ணெய்களின் முதல் இறக்குமதியாளராக உள்ளது. இது தங்கம் மற்றும் எஃகின் இரண்டாவது பெரிய நுகர்வோர் மற்றும் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் வாங்கும் நாடு ஆகும். இது உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமான சந்தையின் தாயகமாகவும் உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்திருந்தாலும், குறைந்தபட்சம் 2050 வரை இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என உலக மக்கள் தொகை கணக்கீடு அமைப்பு எதிர்பார்க்கிறது.

Related Posts

error: Content is protected !!