இந்தியாவின் பிரதமராக ஜின்னா பதவியேற்றிருந்தால் பாக். என்ற நாடு பிரிந்திருக்காது – தலாய் லாமா

இந்தியாவின் பிரதமராக ஜின்னா பதவியேற்றிருந்தால் பாக். என்ற நாடு பிரிந்திருக்காது – தலாய் லாமா

இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளையர்கள் சுதந்திரம் அளித்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்று 2 நாடுகளாக உருவானது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனிநாடாக உருவாகவும், நாட்டின் பிரிவினைக்கு அவரே காரணமாக இருந்தார் என்று முஸ்லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவைக் கூறி வந்த நிலையில் முகமது அலி ஜின்னா பிரதமராகியிருந்தால் இந்தியா பிரிந்து இருக்காது என திபெத்திய தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்!

கோவா மாநில மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களின் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய திபெத்திய தலைவர் தலாய்லாமா, பிரதமர் பதவியினை ஜவர்கலால் நேரு அவர்களுக்கு அளிக்காமல் முகமது அலி ஜின்னாவிற்கு, மகாத்மா காந்தி அவர்கள் அளித்திருந்தால் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்து இருக்காது என தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா கட்சியின் முன்னாள் வெளியுறவு மந்திரியும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் ஜின்னா-இந்தியா: பார்ட்டிசன், இன்டிபென்டன்ஸ் என்ற 674 பக்க சுயசரிதையில் ‘ இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, உயர் அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி ஒருங்கிணைந்த இந்தியாவில் அமையவேண்டும் என்று விரும்பினார். அதுதான் அவர் விரும்பிய இந்தியாவாகவும் இருந்தது. ஆனால் முகமது அலி ஜின்னா, கூட்டு அதிகார ஆட்சி முறையை விரும்பினார். அதை மகாத்மா காந்தியும் கூட ஏற்றுக் கொண்டார். ஆனால் நேருவுக்கு இதில் உடன்பாடு கிடையாது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடக்கும் 1947ம் ஆண்டு வரை நேரு இதே நிலையைத்தான் கொண்டிருந்தார்.அப்போது காங்கிரஸ் மட்டும் கூட்டு அதிகாரப் பகிர்வு கொண்ட ஆட்சி முறைக்கு ஒப்புக் கொண்டிருந்தால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நிலையை நாம் அடைந்திருப்போம். ஆனால் ஜவகர்லால் நேரு அதிக அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி முறையை விரும்பியதால்தான் பிரச்சினையே ஏற்பட்டது.நேருவுக்கு பதிலாக, மகாத்மா காந்தி, ராஜாஜி அல்லது ஆசாத் ஆகியோர் இது குறித்து இறுதி முடிவை எடுத்திருந்தால் நிச்சயம் ஒருங்கிணைந்த இந்தியாவை நாம் அடைந்திருப்போம் என்றே நான் நம்புகிறேன்.வெறுப்பு கிடையாதுமுகமது அலி ஜின்னாவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பு கிடையாது. அப்படி நினைப்பது முற்றிலும் தவறானது. அவருக்கு காங்கிரசின் கொள்கைகளில்தான் கருத்து வேறுபாடு இருந்தது. மற்றபடி இந்துக்கள் மீது அவர் வெறுப்பு கொண்டிருக்கவில்லை” என்று தெரிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது.

இந்நிலையில் தலாய் லாமா இது குறித்து கருத்து தெரிவிக்கையில்… ‘அப்போதைய காலக்கட்டத்தில் ஜின்னாவிற்கு பிரதமர் பதவியினை வழங்கவே காந்தி விரும்பினார், ஆனால் நேரு இந்த விஷயத்தில் தலையிட்டு தான் பிரதமராக பதவியேற்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் மகாத்மா காந்தியின் திட்டமானது நிறைவேறியிருந்தால், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகவே இருக்கும். நேருவை எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும், மிகவும் அனுபவம் வாய்ந்தவர், ஆனால் சில தவறுகளும் நடந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் இருக்கும் முஸ்லீம் மக்களிடம் இருக்கும் பிரிவினையை கலைந்து ஒற்றுமையினை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இந்நிகழ்ச்சியின் மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்… “நிலப்பிரபுத்துவ முறையைவிட ஜனநாயக முறையே நல்லது, அதில் முடிவெடுக்கும் அதிகாரம் சிலரிடம் மட்டுமே உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

error: Content is protected !!