December 2, 2021

நம்மூர் ஊடகச் செய்திகள்தான் உலக அளவில் அதிக நம்பகத்தன்மையாம்!

ஊடகம் அல்லது மீடியா அல்லது பிரஸ் என்பது டிவியாக இருக்கலாம்..வானொலியாகவும் இருக்கலாம்.. இணைய தளமாக இருக்கலாம். …செய்தித்தாளாக இருக்கலாம்…. பத்திரிக்கையாக இருக்கலாம்.. ஏன் யூ டியூப் சேனலாக இருக்கலாம்.. அவ்வளவு ஏன் ட்விட்டர் பாய்ஸ் அல்லது மீம்ஸ் கிரியேட்டர்கள் கூட இப்போது ஊடக பிரிவில் சேர்ந்து விட்டதாலோ என்னவோ இத் துறையின் நிலைமை உலக தரத்தில் மிக ஆரோக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

நம்மை சுற்றி நாம் வாழும் இந்த சமூகத்தில் நடப்பது என்ன?..அது எதற்கு நடக்கிறது.. ஏன் நடக்கிறது என்று தினமும்.. நாம் நம்மை பரிசோதனை செய்து கொண்டேயிருக்க ஊடகங்கள் தான்…பணி ஆற்றுகின்றன…. செய்தி பரிமாற்றம் என்பதுதான் மானுடத்தின் ஸ்திரமான வளர்ச்சி. எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த ஒரு செய்தியும்.. நொடி நேரத்தில்.. எந்த ஒரு மூலைக்கும் போய் சேரும் தொழில் நுட்பத்தோடு இந்த சமூகம்… வளர்ச்சிதான் அடைந்திருக்கிறது… இந்த செய்தி பரிமாற்றங்கள்.. நடப்பது இந்த சமுதாய தெரிவுகளுக்கு மிகச் சிறந்த தேவையாய் இருக்கிறது….போர்க்காலங்களில்…. செய்திகள்.. சேகரிக்க தன் உயிரையும் கொடுக்கும்.. ஊடக வியலாளர்கள் இருக்கிறார்கள்….மழை வெயில்.. குளிர் பனி என்று எதன் பொருட்டும் அவர்களின் தூரம் குறைவதில்லை.. அது ஒரு ஆத்ம நிறைவோடு தன் பணிகளில் கோலோச் சுகிறது…. அதே நேரம்…. இழவு வீட்டில் கூட TRP- க்காக மனிதாபிமானமற்ற கேள்விகளை மைக்கோடு சேர்த்து நீட்டும் நிலையும் இன்று இருக்கிறது…

ஆக செய்திகளை… சேவையாக செய்தது ஒரு காலம்.. இன்று அதற்குள்.. பணமும் அரசியலும் புகுந்து எல்லா தரவுகளையும் தன் பக்கம் இழுத்து தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்தப் படும் ஒரு தன் முனைப்பின் வெளிப்பாடாகவோ… தன் சொந்த நிறுவனத்தின்… வளர்ச்சியாக வோதான்…இருக்கிறது…… ஆளும் கட்சிக்கு ஒரு சேனல், பத்திரிக்கை….. எதிர்க் கட்சிக்கு ஒரு சேனல்,பத்திரிக்கை…..கூடவே நடக்கும் சேனல் அல்லது பத்திரிகைகள் ஒவ்வொன்றும் ஒரு சார்பாகி போனதால் ஒரு சேனலில்.. பத்திரிகையில் வரும் செய்திகள் அப்படியே மாறி வேறு விதமாய் அடுத்த சேனலிலும் பத்திரிகையிலும் வருகிறது.. பார்க்கும், படிக்கும் சாமானியன் என்னதான் செய்வான்..அவனின் சமுதாய பார்வை இச்சூழ்நிலையில் குழம்புமா.. புரியுமா… இதனிடையே தான் அரசியல் பாரபட்ச உணர்வுடன் ஊடகங்கள் செயல்படுவதில் உலகிலேயே நம்ம இந்தியா கடைசி இடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. ஆம். நம் இந்திய ஊடகங்கள்தான் சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் அதிக பாரபட்சமின்றி செயல்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

ஊடகங்களில் அரசியல் பாரபட்சம் கொண்ட நாடுகள் பட்டியலை PEW என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கவே முடியாத அளவு பாரபட்சம் காட்டுவதில் லெபனான் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. அங்கு செய்திகளை ஏற்க முடியாத அளவு 84 சதவிகித மாகவும், ஏற்குமளவு 16 சதவிகிதமாகவும் உள்ளது.

கனடாவில் இது 82 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம். ஏற்க முடியாத பாரபட்ச செய்திகளில் அமெரிக்க ஊடகங்கள் 79 சதவிகிதமாகவும், ஏற்கத்தக்க அளவு 21 சதவிகிதமாகவும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் முறையே, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், தென் கொரியா, ரஷ்யா ஆகி‌யவை உள்ளன. பாரபட்ச செய்திகள் வழங்கும் ஊடகங்கள் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா கடைசி இடத்தில் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.

இந்தியாவில் ஏற்கத்தக்க செய்தி அளிப்பது 40 சதவிகிதமாகவும், ஏற்க முடியாத அளவாக 23 சதவிகிதமும் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 37 சதவிகித தகவல்கள் நடுநிலையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், பிரேசில், தென்ஆப்ரிக்கா ஆகிய 4 நாடுகள் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன.