இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா!

இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா!

ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை – அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப் ப ட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதையொட்டியே ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, நேற்று விமானம் மூலம் ஆமதாபாத் வந்தடைந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இதையடுத்து இருவரும் திறந்த வாகனத்தில் பொதுமக்களை வணக்கம் தெரிவித்துக் கொண்டே புறப்பட்டு சென்றனர். பின்னர் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டனர்.

இந்த சூழலில் இந்திய-ஜப்பான் இடையேயான 12-வது உச்சி மாநாடு காந்தி நகரில் இன்று நடைபெறுகிறது. அதில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதனைத் தொடர்ந்து ஆமதாபாத்தில் புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதனை பிரதமர் மோடியும், ஷின்ஷோ அபேயும் தொடங்கி வைத்தார்.

இந்த ரயிலில் உள்ள விசேஷ அம்சங்கள் –

இந்த புல்லட் ரயில் மணிக்கு, 320 கி.மீ வேகத்தில் செல்லும்.

மும்பை – அகமதாபாத் இடையே உள்ள 508 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் புல்லட் ரயில் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ 1.1௦ லட்சம் கோடி மதிப்பில் இந்த புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.

மும்பை – அகமதாபாத் இடையே 12 ரயில் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 70 முறை இந்த ரயில் இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 750 பயணிகள் ஒரே நேரத்தில் இந்த புல்லட் ரயிலில் பயணம் செய்ய முடியும்.

12 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும். மொத்த வழித் தடத்தில், 92 சதவீத துாரம், மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.

error: Content is protected !!