சர்வதேச சைபர் பாதுகாப்பு : இந்தியா 10வது இடம்!

சர்வதேச சைபர் பாதுகாப்பு : இந்தியா 10வது இடம்!

ர்வதேச தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான்களில் ஒன்றாக இந்தியா ஒரு வலுவான மற்றும் தகுதியான அந்தஸ்தைக் கொண்டுள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், சமீப காலம் வரை, இந்திய அதிகாரிகள் சைபர் தொழில்நுட்பத்தை நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதில் ஒப்பீட்டளவில் குறைந்த கவனம் செலுத்தியுள்ளனர். தனிப்பட்ட, பொருளாதார அல்லது அரசியல் லாபத்திற்காக செயல்படும் ஹேக்கர்கள் முன்வைக்கும் சைபர் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க நடவடிக்கைகளும் குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இச்சூழ்நிலையில் ஐநா வெளியிட்டுள்ள சர்வதேச சைபர் பாதுகாப்பு குறியீடு அட்டவணையில் 47 ஆவது இடத்தில் இருந்து, 37 இடங்கள் முன்னேறி 10 வது இடத்தை பிடித்துள்ளது. சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் 47 வது இடத்தில் இருந்த இந்தியா 37 இடங்கள் முன்னேறி, 2020 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் 97.5 புள்ளிகளை பெற்று 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் 100 புள்ளிகளை பெற்று, அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 99.4 புள்ளிகள் பெற்று, இரண்டாம் இடத்தை சவுதி அரேபியாவும் பிரிட்டனும் பகிர்ந்து கொண்டுள்ளது. சிங்கப்பூர் 4 வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவும் மலேசியாவும் 5 வது இடத்தையும் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில் ஜப்பான் 7 வது இடத்தை பிடித்துள்ளது.

கனடா 8 வது இடத்தையும் பிரான்ஸ் 9 வது இடத்தையும் பெற்றுள்ள நிலையில், சீனா 33 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 79 ஆவது இடத்திலும் உள்ளன. ஆசிய பசிபிக் நாடுகள் அளவில் இந்தியா 4 வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அமைதி மற்றும் சைபர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா பேசியபோது, “பயங்கரவாத குழுக்கள் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் வெறுப்புணர்வை விதைக்கவும் இணைய வெளியை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இதுபோன்ற இணையவெளி தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உறுப்பு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!