October 3, 2022

இந்தியா என்றால் ஹி(இ)ந்துக்கள் தேசமென யார் சொன்னது..!?

என்ன மனிதர்களப்பா நீங்கள்?!..முஸ்லீம் என்றோ இந்து என்றோ மத பிரிவின் படி இந்த நாடு கட்டமைக்கப்படவில்லை. இந்தியா என்றால் ஹிந்து என்று மீள் பெயர் உருவாக்கப்பட்டிருக்கிறது. உருது மொழியில் இருந்து புதிய பிரிவாகி ஹிந்தி பின்னர் கலவை மொழியாகி பல பரிணாம வளர்ச்சியுடன் பல்வேறு பாகங்கள் வழியே மொழி உருவானதான் படியே ஹிந்துவும் இந்தியாவும் மீள் கட்டமைப்பு நடந்தது தான் நமது நாடு. வடநாட்டில் ஹிந்தி ஆதிக்க மொழியாக இருக்கும் போது மராத்தி பெங்காலி கொங்கினி அசாமி பேஜ்ப்பூரி எப்படி பேச முடியும். யோசியுங்கள். இந்திய சுதந்திரத்திற்கு பின் மொழி வாரியாக மாநிலம் ஏன் எதற்கு எப்படி அமைத்தார்கள்..?!

தென்னிந்தியாவில் எப்படி தெலுங்கு கன்னடம் மலையாளம் மொழிகள் பேசுவது மாதிரி வட இந்தியாவில் இந்தி கலப்பு மொழி. போரால் அதன்வழி உறவால் சித்தாதங்கள் வழியே பிறமொழியால் கலப்பு நடந்தாலும் மொழியே நாட்டை உருவகப்படுத்தி சொல்லும் நிஜமான பிம்பம். ஆனால் இந்தியாவில் உணவு முதல் வாழ்வியல் முறைகள் உட்பட எல்லாமே புதிய புதிய ஆட்சியாளர்களால் மீள் சீரமைப்பு கட்டமைப்புடன் தொடர்ந்து போர்களால் நடந்து வந்தது அன்றைய காலக் கட்டமைப்பில் ராஜ்ஜியத்தை மறைமுகமாக ஆளும் ராஜகுருவாக விளங்கிய மத குருமார்கள் எனும் புதிய சமூக கருத்தியல் மற்றும் பழக்க வழக்கங்களால் தானே தவிர தனித்த இந்து மதமாய் இந்திய ராஜ்ஜியமாய் உருவானது அல்ல .

ஒரு 75 வருடம் முன்பு ஏன் 50 வருடம் 25 வருடம் முன்பு வரையிலும் எப்படி இந்தியா இருந்தது. எப்படிகோயில்கள் இருந்தன.எப்படி மசூதியும் சர்ச்சும் இருந்தன. எப்போதாவது இந்தியா முழுமைக்கும் சென்று வந்தீர்களா.?! அல்லது இந்திய பயணம் மேற்கொண்டவர்களிடம் சென்று வந்தவர்களிடம் ஹிந்தியே தெரிந்திருந்தாலும் அவர்களின் புரிதல் மூலம் கிடைத்த அனுபவம் என்னவென்பதை கேட்டு யோசியுங்கள். அன்றைய நிலமை என்ன கண்டீர்கள் அதைவிட இன்றைய காலக்கட்டத்தில் எல்லா மத ஆலயங்கள் சடங்குகளில் கூட்டம் இருக்கிறது. இசை தட்டுகள் கத்துகின்றன ரெடிமேடு மேளம் வந்துவிட்டது. ஆனால் எல்லா மதங்களிலும் ஆன்மீகம் என்பது என்ன.. அது இப்போது எங்கே.?. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்வியல் முறைகள் எப்படி என்ன நடந்தது. முஸ்லீம் படையெடுப்பு முன் உள்ள அரசியல் படியுங்கள். வட இந்தியாவில் வாழும் பெரும்பான்மை சமூகம் அகதிகளாய் பயணியாய் படையெடுப்பில் வந்து இந்துவாக கட்டமைக்கப்பட்ட சமூகம். பின்னர் உருது பேசும் அரசர்கள் வாழ்வில் வந்ததால் முஸ்லீம் என உருமாறும் சூழல் ஒவ்வொரு காலக்கட்டத்தில் இருக்கிறது.

3௦௦௦ வருடங்களுக்கு முந்தைய சமண மதத்திற்கும் அதன் பின்பு 2௦௦௦ வருடங்களுக்கு முன்பு உருவான புத்தமதம் இந்தியாவில் எங்கே.?! அதன் பின்பும் முன்பும் கிரேக்கம் சீக்கியம் ஜெயின் உட்பட பல மதங்கள் உருவாயின. ஏன் பெளத்தம் இந்தியாவை தாண்டி பெரும் எழுச்சியோடு உலகெங்கும் இருக்கும் போது இந்துமதம் எப்படி இந்தியாவில் இப்படி கட்டமைக்கப் பட்டது. திராவி டம் எப்படி புரிதலற்ற மாயையோ அப்படியே ஹிந்துவாதம் எனும் ஆரிய மாயை.உருவாக்கும் பிம்பமே இந்துத்வா.! இவைகளை கட்டமைக்கும் வரலாறு தாண்டி உண்மையை தேடுங்கள். வட இந்தியாவில் ஹிந்து தோன்றலாக கருதுபவர்கள் எங்கிருந்து எதன் வழியே எந்த மதத்தில் இருந்து உட்புகுந்து உருமாறினார்கள் என்று பல்வேறு வெளிநாட்டு நூல்கள் ஆராய்ச்சி படிமங்கள் திரைப்படங்கள் உணர்த்தும் உண்மை.

டிரம்ப் வருகையை மீறி டெல்லி அரசியலில் கெஜ்ரிவால் அரசை கதிகலக்கும் சாமர்தியம் அங்கு பாதுகாப்பில் ஈடுபடும் மத்திய அரசின் பாதுகாப்பு படைக்கு அதிகாரம் கொடுப்பது டெல்லி அரசா மத்திய அரசா..! விடை தேடுங்கள் தமிழநாட்டில் தென்னிந்தியாவை தாண்டி மதம் ஒரு கபட அரசியல். அரசியல் ராஜ தந்திரம்.காந்தி என்ற ஆளுமை பிம்பம் உலகம் முழுக்க இந்திய பிராண்டாக 1௦௦ வருடங்களை உலக அரசியலில் கடந்து 15௦ வருடத்தில் பிறந்தநாளை இந்தியாவை தாண்டி உலகெங்கும் கொண்டாடி வரும் வேளையில் எதற்காக தன வாழ்வின் இறுதி வரை போராடினாரோ எதற்காக புரிதலே இல்லாத கோட்சேவால் கொல்லப்பட்டு 7௦ வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு ரத்தம் சிந்தினாரோ அதே காலக் கட்டத்தில் இன்றும் இந்தியா இருப்பதோடு அதிக உயிரை காவு வாங்குகிறது.

டெல்லியில் அரசியல் ஆதாயம் தேடிட யார் முயன்றாலும் அது இந்திய கட்டமைப்பை அரசியல் வாழ்வை பொருளாதாரத்தை சீரழிக்கும் சம்பவம் பல இந்திய வரலாற்றில் உண்டு. முதலில் இந்திய அரசியலில் ஏற்ற இறக்கம் கொண்ட உருவாக்கப்படாத நேர்மையான வரலாற்றில் உண்மையான மோசமான பக்கத்தை கொண்ட அரசியலை படியுங்கள்..!? அப்போது கிடைத்த புரிதலை கொண்டு இந்தியாவின் மாற்றம் இந்திய தேசம் அல்ல ஹிந்துக்களின் தேசமாக உருமாற்றம் அடைந்தது புரியும்..?!

சிவகுமார் சேதுராமன்