September 18, 2021

இந்தியா : சைவமுமில்லை, அசைவமுமில்லை – இரண்டும் இணைஞ்ச கலவையாக்கும்!

உலகம் முழுக்க இரண்டு வகையான உணவு பழக்கம் இருக்கிறது. ஒன்று அசைவம் சாப்பிடுபவர்கள். இன்றொன்று சைவம் சாப்பிடுபவர்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் மூன்று வகையான உணவு பழக்கம் இருக்கிறது.ஒன்று சைவம்.. இரண்டு சின்ன அசைவம்.. மூன்று பெரிய அசைவம். அதாவது சைவத்தை வெறுப்பவர்கள்.

food june  14

அது மட்டுமின்றி உலகம் முழுக்க இருக்கும் சைவம் அசைவம் என்ற இரண்டு பிரிவினர் ஒருவரை ஒருவர் இழிவு படுத்திக் கொள்வதில்லை. அது அவரவர் உணவு பழக்கம் என்று எடுத்துக் கொள்ளும் பக்குவத்தோடு இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் ஒரு உணவு பழக்கம் கொண்டவன் இன்னொரு உணவு பழக்கம் கொண்டவனை இழிவாக பார்ப்பதை காண முடியும்.
சைவம் சாப்பிடுபவன் ஒட்டுமொத்தமாக அசைவம் சாப்பிடுபவர்களை அசிங்கமாக பார்க்கிறான் என்றால், அசைவம் சாப்பிடுபவனோ தன்னைப்போலவே அசைவத்தில் வேறொரு விலங்கை சாப்பிடும் மக்களை இழிவாக பார்க்கிறான்.தங்களை சைவம் சாப்பிடுபவர்கள் இழிவு படுத்துவதை எதிர்த்து கொதிக்கும் அசைவ பார்ட்டிகள், தங்களைப்போன்ற உணவு பழக்கம் கொண்டவர்களை இழிவாக பார்ப்பதுதான் கொடூரமான நகைச்சுவை.

இதனிடைய்ர்ர் கோழி மற்றும் மீன் ஆகியவற்றில் இந்தியா மிகப்பெரிய உணவுச் சந்தையாக மாறியிருக்கிறது. இருப்பினும், சைவ உணவுகளால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து, மத்திய அரசின் ரெஜிஸ்டிரார் ஜெனரல் ஆஃப் இந்தியா (ஆர்.ஜி.ஐ) நடத்திய ஆய்வில் புள்ளிவிபர முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில், இந்தியாவில் 70 சதவீதம் பேர் அசைவ உணவுகளை உண்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியாவில் மாறிவரும் உணவு முறைகளால் அண்மைக்காலமாக, இருதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவை அதிகரித்து இருப்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு சர்வதேச ஆராய்ச்சிகளில் அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளமிடுபவையாக உள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது. அதேபோல், அசைவ உணவுகளை அடிக்கடி உண்போரை விட சைவ உணவு உண்போர்களுக்கு சுவாசக் கோளாறுகளும், பேன்கிரியாட்டிக் கேன்சர் போன்ற நோய்களும் தாக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளன.

எனினும், ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம் இந்தியாவில் கோதுமை, அரிசி, சர்க்கரை ஆகியவற்றின் பயன்பாட்டை விட கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலகிலேயே கோழி இறைச்சியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில், இந்தியா முழுவதிலும் இருந்து 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இந்த ஆய்வின் அடிப்படையில், தெலங்கானாவில் 99 சதவீத மக்கள் அசைவப் பிரியர்களாக இருப்பதாகவும், 98.8 சதவீத ஆண்களும், 98.6 சதவீத பெண்களும் அசைவ உணவையே விரும்பி சாப்பிடுவதாகவும் தெரிய வந்துள்ளது.தெலங்கானாவைத் தொடர்ந்து மேற்கு வங்கம், ஆந்திர மாநிலம், ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.

அடுத்தபடியாக, இந்தியாவில் சைவப் பிரியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக குஜராத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களும் சைவப் பிரியர்கள் வசிக்கும் மாநிலங்களில் வரிசையில் இடம்பெற்றுள்ளன.குஜராத்தில் 5 பேரில் 2 பேர் அசைவப் பிரியர்களாக உள்ளனர். கிடைத்திருக்கும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் குஜராத்தில் 61.80 சதவீதம் பேர் சைவப் பிரியர்களாகவும், 39.05% பேர் அசைவப் பிரியர்களாகவும் உள்ளனர்.