விமானப் போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28–ந்தேதி வரை நீட்டிப்பு!

ர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28–ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் 23–ந்தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்த தடை, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் 15–ந்தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று பல நாடுகளிலும் பரவியதால், 15–ந்தேதி சர்வதேச விமான போக்குவரத்து தொடங்காது என்று அறிவிக்கப்பட்டு, சர்வதேச விமான பயணிகள் சேவைக்கான தடை ஜனவரி 31–ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்தது.

தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28–ந்தேதி நள்ளிரவு 11.59 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் அங்கீகரிக்கப்பட்ட சில சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.