March 22, 2023

இந்தியாவில் லஞ்சம், ஊழல் கொஞ்சம் கூட குறையவில்லை! – சர்வே ஷாக்

“மோடி அரசின் ரூபாய் பணமதிப்பு நீக்கம், கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கை என்று விளம்பரப்படுத்தப்பட்டது – ஆனால் அதுவே இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்” என்று முன்னால நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டி இருந்ததை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் நம் இந்தியாவில் ஊழல் கொஞ்சம் கூட குறையவே இல்லை என்று சர்வதேச ஊழல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது  உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைப்பிறகு  சர்வதேச ஊழல் கண்காணிப்பு அமைப்பு, இந்தியாவில் ஊழல் பற்றி 200நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதற்காக ஒரு லட்சம் பேரிடம் கருத்துக்களை கேட்டது. அப்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் பணி நடப்பதாக 45 சதவீதம் பேர் கூறினர். கடந்த 12 மாதங்களில் ஒரு முறையோ அல்லது 2 முறையோ லஞ்சம் கொடுத்தோம் என்று 20 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 25 சதவீதம் பேர் பலமுறை லஞ்சம் கொடுத்ததாக கூறினர். ஊழலை ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று லஞ்சம் கொடுத்தவர்களில் 80 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். லஞ்சம் கொடுத்தால் தான் அதிகாரிகள் பணி செய்வதாக 30 சதவீதம் பேர் கூறினர்.

அதிலும் கட்டாயப்படுத்தியே லஞ்சம் வா்ஙகுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 20சதவீதம் பேர் பணமாக லஞ்சம் கேட்கின்றனர். சிசிடிவி காமிராக்கள் இருந்தும் லஞ்சம் கேட்கத்தான் செய்வதாக 9சதவீதம் பேர் கூறினார்கள். குறிப்பாக நகராட்சி அலுவலகங்கள், போலீஸ் நிலையம் , உள்ளூர் வரி மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களில்தான் அதிகம் லஞ்சம் நடமாடுகிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.