இந்திய -சீன எல்லை மோதல் : நடந்தது என்ன? வீடியோ

இந்திய -சீன எல்லை மோதல் : நடந்தது என்ன?   வீடியோ

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது. இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், இந்தியாவைச் சீண்டினால், ஆத்திரமூட்டினால் எந்தச் சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் வல்லமை உடையது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதே சமயம் 20 ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய சீனா ஒருதலைபட்சமாக நடந்ததால், இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. அதாவது கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு இந்திய – -சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட இந்திய வீரர்கள் 3 பேர் வீமரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. பின்னர் இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்ததாக தெரிவித்தது. (மொத்தம் 20 வீரர்கள் வீரமரணம். இதில் தமிழகம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர்)

இந்திய தரப்பில் காயமடைந்த 4 வீரர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மோதல் தொடர்பாக இந்திய ராணுவ வட்டாரம் கூறியதாக ஏஎப்பி செய்திநிறுவனம் வெளியிட்ட ஒரு செய்தியில், ‘‘மோதலின் போது துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லை. கைகளை கொண்டு மோதலில் இரு ராணுவத்தினரும் ஈடுபட்டனர். கற்களை ஒருவருக்கு ஒருவர் மீது விசியும், கைகளால் குத்தியும் மோதல் நடந்தது. சீன வீரர்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டஆயுதங்கள் மூலம் தாக்கனர். சுமார் 4 மணி நேரம் இந்த மோதல் நீடித்ததாக கூறியுள்ளது. இந்த மோதலை சீன பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இது குறித்து பேசியுள்ளார்.அவர் பேசுகையில், 20 ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.அந்த துணிச்சலான வீரர்களுக்கு எனது இதயப்பூர்வ அஞ்சலி. இந்த வலியை எதிர்கொள்ள அவர்களின் குடும்பங்களுக்கு பலம் அளிக்குமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.எல்லைப் பிரச்சனையை கையாள்வதில் மத்திய அரசின் கொள்கை என்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு விளக்க வேண்டும்.மேலும் இந்திய -சீன எல்லைப் பிரச்சனையின் உண்மை நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!