இந்து கோயிலுக்கு முஸ்லிம் ஆபீசர் பாதுகாப்பு ! – அமெரிக்காவில் அன்னியோன்யம்

இந்து கோயிலுக்கு முஸ்லிம் ஆபீசர் பாதுகாப்பு ! – அமெரிக்காவில் அன்னியோன்யம்

அமெரிக்காவின் இன்டியானாபொலிஸ் நகரில் இருக்கும் மிகப்பெரிய இந்துக் கோயிலின் பாதுகாப்புப் பணியை கவனிக்கும் போலீஸாருக்கு தலைமை அதிகாரியாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உள்ளூர் காவல்துறையில் பணிபுரிந்து வரும் அந்த அதிகாரியின் பெயர் ஜாவேத் கான். இந்தியாவின் மும்பையில் பிறந்து, புனேயின் லோனாவாலாவில் வளர்ந்தவர் அவர். அமெரிக்கா வுக்கு கடந்த 2000-ஆம் ஆண்டில் ஜாவேத் கான் சென்றார். இன்டியானா வில் 2001-ஆம் ஆண்டில் அவர் நிரந்தரமாக குடியேறினார்.

us mu jy 25

ஹிந்துக் கோயிலின் பாதுகாப்பு பணியை கவனிக்கும் போலீஸாருக்கு இயக்குநராக தற்போது ஜாவேத் கான் நியமிக்கப்பட்டுள்ளார். டேக்வான்டோ என்ற தற்காப்புக் கலையில் 8 முறை கருப்பு நிற பெல்ட்டுகளை வாங்கியுள்ளார். கிக் பாக்ஸிங் சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளார்.

ஹிந்துக் கோயிலின் தலைமை காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பிடிஐ செய்தியாளருக்கு ஜாவேத் கான் அளித்த பேட்டியில், “நாம் அனைவரும் இந்தியர்கள். எனது குடும்பத்தில் பாதி பேர் ஹிந்துக்கள். ஹிந்து-முஸ்லிம் மத வேறுபாட்டில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் எனது பணியைத்தான் செய்து வருகிறேன். சிறப்பாகவோ அல்லது அதிசயமாகவோ எதுவும் செய்து விடவில்லை’ என்றார்.

error: Content is protected !!