இந்தியாவிலே பள்ளிக்கூடங்கள் எக்கச்சக்கம்..:ஆனா படிப்பறிவு கம்மி!

நம் நாட்டில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை சீனாவை விட  கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக மாக இருந்தாலும், கல்வித் தரம் குறைந்தே காணப்படுகிறது என ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி அடிப்படை உரிமையாகும். இதில் மாணவர்கள் இலவசமாகக் கல்வி கற்க அரசாங்க பள்ளிகள் செயல்படுகின்றன. ஆனால் இலவச கல்வி வழங்கும் அரசு பள்ளிகளை விடத் தனியார் பள்ளி களின் விகிதம் 7: 5 ஆக உள்ளது. இந்தியாவில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 71 சதவீத பேர் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் பயில்கின்றனர், ஆனால் மீதியுள்ள 29 சதவீத பேர் தனியார் பள்ளிகளில் பயில்கின்றனர். அதேபோல இந்தியாவில் தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலை மட்டத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கல்வியின் தரம் குறைவாக இருந்துவருகிறது. இதற்கு ஆசிரியர்களின் பற்றாக்குறையும், தகுதியற்ற முறையில் இயங்கும் பள்ளிகளும் முக்கியக் காரணமாகத் தெரிவித்துள்ளனர் என்பது பழைய தகவல் .

இதனிடையே  இந்தியாவின் கல்வி தரம் குறித்து நிதி ஆயோக் ஆய்வொன்றை மேற்கொண்டது. அதிலும், இந்தியாவில் கல்வித் தரத்தினைக் காட்டிலும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தொடக்கநிலை மற்றும் இடைநிலை மட்டத்தில் இந்தியாவில் அதிகளவிலான தனியார் பள்ளிகள் உள்ளன. 6 வயது முதல் 14 வயது வரையிலான மாணவர்களில் 71 சதவிகித மாணவர்கள் அரசு பள்ளிகளிலும் மீதமுள்ள 29 சதவிகித மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் படிக்கின்றனர்.

அதே சமயம் சீனாவில் ஐந்து லட்சம் பள்ளிகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன. சீனாவை விட மூன்று மடங்கு அதிகம். ஆனால், இந்தியாவில் கல்வித் தரம் குறைந்து காணப் படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணங்கள் ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும் தகுதியற்ற முறையில் இயங்கும் பள்ளிகள். நான்கு லட்சம் பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் படிக்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.1.5 லட்சம் மாணவர்கள் நிர்வாகம் சரியில்லாத பள்ளிகளில் படிக்கின்றனர்.

Education System in India

ஆனால் இந்தியாவில் மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் கிராமப்பகுதிகளில் 100 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்தான் இருக்கின்றனர். இதனால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் 10 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் 40 சதவிகித ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தானிலும் இதே நிலைமைதான்.

ராஜஸ்தான் , கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் 70 ஆரம்ப பள்ளிகளில் 50 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளனர். பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் 15 சதவிகித ஆரம்ப பள்ளிகளில் 50 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதி பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை வாசிக்க தெரியவில்லை. 100 பேரில் 30 மாணவர்கள் மட்டுமே ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை செல்கின்றனர். 70 சதவிகித ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் குறித்த போதிய திறமையில்லை. மக்கள் தொகையில் ஒத்திருக்கும் சீனாவுடம் ஒப்பிடும்போது, பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், கல்வியின் தரம் குறைந்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.