September 24, 2021

பார்வையற்றோர் 20 ஓவர் உலக கோப்பை: சாம்பியனான இந்திய டீமுக்கு மோடி வாழ்த்து

2012-ம் ஆண்டு நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று 2-வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டிய இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர்களின் சாதனை இந்தியாவை பெருமைப்பட வைப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.இந்த பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்டில், 3 வகையான பார்வை குறைபாடு உள்ள வீரர்கள் இடம் பெற்று இருப்பார்கள். ஆடும் லெவன் அணியில் குறைந்தது 4 பேர் முற்றிலும் பார்வை இல்லாதவர்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

criket feb 13

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. அந்த அணியில அதிகபட்சமாக பதார் முனி 57 ரன்கள் குவித்தார்.இந்தியத் தரப்பில் கேதன் படேல், முகமது ஜாபர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக பிரகாஷ் ஜெயராமையா ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் குவித்தார்.

பாகிஸ்தான் வீரர் பதார் முனிர் 570 ரன்கள் குவித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி 9 ஆட்டங்களில் விளையாடி அதில் 8-இல் வெற்றி கண்டது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி, இறுதி ஆட்டத்தைத் தவிர எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் வாழ்த்து

தற்போது உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் : பார்வையற்றோர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வாகை சூடியிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். இந்திய வீரர்களின் சாதனையை நினைத்து இந்தியாவே பெருமை கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.