October 18, 2021

கபடியில் உலகக் கோப்பையை வென்றது இந்தியா!

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், உலக கோப்பை கபடி தொடர் நடந்தது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் அரையிறுதியுடன் திரும்பிவிட்டன. பலரும் எதிர்பார்த்தது போல, இந்தியா, ஈரான் அணிகள் பைனலுக்கு முன்னேறியது. இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற ஈரான் அணி, ‘சைடு’ தேர்வு செய்தது.

kabadi oct 23

கபடியில் கில்லாடியாக விளங்கும் இந்தியாவிற்கு ஈரான் கடும் நெருக்கடி கொடுத்தது. தொடக்கத்தில் இந்தியா முன்னிலை பெற்றிருந்தது. அதன்பின் ஈரான் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஒருகட்டத்தில் இந்திய அணி 3 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குச் சென்றது. தொடர்ந்து கேப்டன் அனுப் குமாரும், ஈரான் வீரர்கள் ‘பிடியில்’ சிக்கினார். கடைசியில் இந்திய அணி ‘ஆல் அவுட்டாக’ ஈரான் அணிக்கு போனசாக 2 புள்ளி கூடுதலாக கிடைத்தது. முதல் பாதியில் இந்திய அணி 13-18 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

இரண்டாவது பாதியில் சைடு மாறிய பின்னர் இந்தியா வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரைடு மற்றும் கேட்சிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் இந்திய அணி மளமளவென புள்ளிகள் பெற்றது. இந்திய வீரர் அஜய் தாகூர், அடுத்தடுத்து புள்ளிகள் குவித்தார். இதனால், 17-19 என, ஈரானை நெருங்கியது.

தொடர்ந்து அசத்திய இந்தியா, ஈரானை ‘ஆல் அவுட்’ செய்ய, 24-21 என, முதன் முறையாக முன்னிலை பெற்றது. போட்டி முடிவதற்கு கடைசி 5 நிமிடம் முன், ஈரானை விட இந்தியா 5 புள்ளிகள் (29-24) முன்னிலை பெற்றது.

பின், இந்தியா ஈரானை இரண்டாவது முறையாக ‘ஆல் அவுட்’ செய்ய 34-24 என, புள்ளிகள் குவித்தது. முடிவில் இந்திய அணி 38-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, உலக கோப்பை வென்று அசத்தியது. இதுவரை நடந்த 8 கபடி உலக கோப்பை தொடரிலும் இந்தியா கோப்பை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெயில் பீஸ்:

நம்ம இந்திய விளையாட்டுச் சரித்திரத்திலே இன்னிக்கு ஒரு மைல் கல்லா நம் மண்ணோட வீரம் செறிந்த கபடி விளையாட்டில் உலகக்கோப்பையை இந்திய அணி மீட்டு எடுத்துருக்குது. இதற்கு முதலில் மூச்சி முட்ட சிரம் தாழ்த்தி கொஞ்சம் வாழ்த்துச் சொல்லிக்கலாம்.

இந்த கபடியைப்பற்றி   எக்ஸ்ட்ரா தகவல்கள் ..

கபடியைப் பற்றி கொஞ்சம் தவறான புரிதல் நம் ஜனங்ககிட்டே இப்போ நிலவுது.ஏதோ இது நாட்டுப் புறங்களிலே- ஐ மீ வில்லேஜ்களில் விளையாடப்படும் விளையாட்டு போலவும், ஜல்லிக் கட்டு மாதிரி ஆண்மைக்கு ஆபத்து தரும் விளையாட்டு போலவும் இதுக்ல்லேம கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும் எனவும் மேலெழுந்தவாரியாக ஓர் எண்ணம் ரீசண்ட் சிட்டி மக்களிடம் இருக்கிறது. குறிப்பா படித்தவர்கள் மத்தியில்…

ஏன்னா முன்னெல்லாம் கிராமப்புறங்களில் சினிமா போஸ்டர்களுக்கு இணையாக கபடிப் போட்டியின் போஸ்டரும் ஒட்டப்பட்டிருக்கும்.முதல் பரிசு ரூ 555.. இரண்டாம் பரிசு ரூ 333.. மூன்றாம் பரிசு ரூ111. ஆனால் இங்கே பரிசுத்தொகை முக்கியமில்லை. விளையாடணும். ஜெயிக்கணு. அம்புட்டுத்தான்.

இந்த கபடி தெற்காசியாவில் தோன்றிய விளையாட்டு…இதன் வயது 4000 வருடங்களுக்கும் அதிகமா இருக்குமாம். அண்டை நாடான பங்களாதேஷின் தேசிய விளையாட்டு இது என்பது அடிசினல் தகவல். கபடி தெற்காசியாவில் மட்டுமல்லாது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் விளையாடப்படுது. நேத்திய கண்க்கெடுப்புப்படி கபடி 65 நாடுகளில் விளையாடப்படுவதாகக் கணக்கிடப்பட்டிருக்குது.

கபடி என்ற சொல் தமிழிலிருந்துதான் வந்திச்சின்னு சொல்லப்படுது. கை +பிடி தான் கபடியாகியது. அதாவது,அணியினர் தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு விளையாடுவது என்று பொருளாம்.

ஆனால் அஸ்க்கு..புஸ்க்கு. அப்பளம் வடை இது ஹிந்தி வார்த்தையாகும் எனவும் KABBADI -ன்னா மூச்சை விடாமல் நிறுத்திப்பிடித்தல் (HOLDING THE BREATH)ன்னு சொல்வாங்கர்கள்.

இந்த விளையாட்டு வெவ்வேறு நாடுகளில் அவர்களது அமைப்புக்கேற்ப விளையாடப்படுகிறது என்றாலும் இதன் ஆட்ட முறை ஒன்றுதான். கபடி விளையாடும் போது அவரவர் மொழிக்கேற்ப பாடும் முறை (chant word ) வேறுபடும் .

கபடி (kabbadi) ————— இந்தியா ,பாகிஸ்தான்
ஹடுடு (hadudu) —————– பங்களாதேஷ்
டூ-டூ (do-do) —————– நேபாளம்
குடு (guddo) —————– ஸ்ரீ லங்கா
சடு-குடு (chado-guddo) —————– மலேசியா
டெசிப் (techib) —————– இந்தோனேசியா