February 4, 2023

உலகின் குருவாக இந்தியா :ரஷ்யா & அமெரிக்காவுடன் எப்படி உறவை பேலன்ஸ் செய்கிறது?

ம் நாட்டின் ராஜதந்திரம் எளிமையானது! அது பற்றி பார்க்குமுன், கொஞ்சம் கடந்தகால இந்திய வெளியுறவு கொள்கை பற்றி அவசியம் அறிய வேண்டும். மாமா நேருவின் காலத்தில் அணி சாரா நாடுகள் என்றதொரு அணியை ஏற்படுத்தி இருந்தோம். ஆனால் சீனாவுடனான போரில் நமக்கு அணி சாரததால் அனாதையாகி நின்றோம். 1971 போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்க, பிரிட்டிஷ் விமனாந்தாங்கி கப்பல்கள் மூலம் வங்கால விரிகுடாவில் சுற்றி வளைக்கப்பட்டு இந்தியாவின் கதை முடிந்தது என்ற நிலையில், ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களை சுற்றி வளைத்தது. இதற்கு மேல் முன்னேறினால், திருபிப்போக மீதி எதுவும் இருக்காது என்று ரஷ்யா எச்சரித்தபோது, அமெரிக்காவும். பிரிட்டிஷும் அசிங்கப்பட்டு ஓடின. அது முதல் ரஷ்யா நமக்கு உற்ற நண்பன் ஆனது. அந்த நட்பு சோவியத் யூனியன் உடைந்த பின்னர் கூட பாதிக்காமல் தொடர்ந்தது என்றால், அதில் நன்றிக்கடனும் ஆழமாக இன்றும் இருகிறது.

இந்தியா ஆயுதங்களுக்காக ரஷ்யாவை மிகப்பெரிய அளவில் சார்ந்திருந்தோம் என்றால், பாகிஸ்தான் அமெரிக்காவை சார்ந்திருந்தது. இந்தியாவை இரு நாடுகளாக உடைத்த பிரிட்டிஷ், பாகிஸ்தான் பக்கமே இருந்தது. அதன் நோக்கம் பாகிஸ்தானை மேம்படுத்துவது அல்ல, இந்தியாவை அதன் மூலம் மீண்டும் ஒரு சக்தியாக எழுந்துவிடாமல் பார்த்து கொள்வதுதான். அது மட்டுமல்ல நேட்டோ நாடுகளில் மக்கள் கூட பாகிஸ்தான் மீது வைத்திருந்து ஒரு உறவு, இந்தியர்கள் மீது இருந்ததிலலை. இந்தியர்களை பாம்பாட்டிகள் என்று வர்ணித்தவர்கள் கூட பாகிஸ்தான் ஒரு வளர்ந்த நாடாக பாவித்தார்கள். இது அங்கு மட்டுமல்ல, ஜப்பானில் பாகிஸ்தானியர்களுக்கு அரசு கொடுக்கும் சுதந்திரமும், இந்தியர்களுக்கு இருக்காது. இதுவெல்லாம் ஓரளவுக்கு மாறியது என்றால் அது IT புரட்சிக்கு பின்புதான்.

ஆனால் இஸ்ரேல் (Jews)மட்டும் இந்தியா மீது ஒரு அளவற்ற அன்பை எப்போதும் மாறாமல் பொழிந்தது. அதற்கு காரணம், இரண்டாம் உலகப் போரில் இஸ்ரேலியர்களை உலகத்தில் யாரும் ஏற்றுக் கொள்ளாமல் நாய்களை விரட்டுவது போல விரட்டியபோது அவர்களுக்கு அடைக்கலம் தந்து. அவர்களுக்காக ஒரு நாட்டை பெற்று தந்ததில் இந்தியர்க்ளின் பங்கு மகத்தானது என்ற நன்றிக்கடனே! அங்கே ஒவ்வொரு இஸ்ரேலியரும், இஸ்லாமியர்கள் மெக்கா செல்வது போல, ஒரு நாள் இந்திய மண்ணில் கால் பதிப்பதை புனிதமாக இன்றும் கருதுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியோ இஸ்லாமிய நாடுகளுக்காக இஸ்ரேலை ஒதுக்கியது. ஆனால் இஸ்லாமிய நாடுகளோ இந்தியாவை தங்கள் வேலைக்கான ஆதாரமாகவும், கச்சா எண்ணெய் விற்க ஒரு மூன்றாம் தர வாடிக்கையாளராகவும் மட்டுமே பார்த்தது. அவைகள் ஒவ்வொரு நிலையில பாகிஸ்தானை மட்டுமே ஆதரித்தது மட்டுமல்ல. அதையும் தாண்டி அவர்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிற்க ஏராளமான நிதிகளையும், ஆயுதங்களையும் கொடுத்தது.

இந்தியாவின் நிலை உலக அரங்கில் எவ்வளவு மோசமாக பார்க்கப்பட்டது என்றால், நான் ஒரு முறை ஸ்ரீலங்கா வழியாக சென்றபோது, ஏர்போர்ட்டில் இந்திய ரூபாய்களை வாங்க மாட்டோம் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் பாகிஸ்தான் ரூபாயை வாங்குவோம் என்று அந்த கடைக்காரன் சொன்னபோது அசிங்கமாக இருந்தது. அந்த அளவிற்கு இந்தியர்களின் நிலை கேவலமாக இருந்தது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நாம் ஏதாவது க்யூவில் நின்றால் நம்மை பார்த்துவிட்டு வேறு க்யூவிற்கு மாறுவார்கள். ஆனால் கருப்பர்கள் நம்மை அன்போடு பார்ப்பார்கள் என்பது வேறு கதை. நாம் IT துறையில் கால்பதித்த பின்னரும் கூட, நம்முடைய பாஸ்போர்ட்டுக்கு ஒரு மூன்றாம் தர குடிமகனின் மரியாதையே நமக்கு கிட்டியது. அது வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல, வளைகுடா, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது பொதுவாகவே இருந்தது.

சீனாக்காரன் நம்மை மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருப்பான். இதில் வேடிக்கை என்னவென்றால் பரம வைரிகளான சீனாவும், ஜப்பானும் பாகிஸ்தானியர்களை ஒருசேர நட்பாக கருதுவார்கள், ஆனால் இந்தியர்களை புறக்கணிப்பார்கள். மோடி ஆட்சி அமைக்கும் முன்பு நமது ராஜதந்திரம் என்பது ஏதாவது ஒரு நாட்டின் பின்னால் நிற்பதாகவே இருந்தது. நம் ஆயுதங்களுக்காக ரஷ்யாவை சார்ந்திருந்தோம். இன்னும் சொல்லப்போனால் வாஜ்பாய் ஆட்சிக்கு பின்னால் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு பெரிய அளவிளான தளவாடங்கள் மட்டுமல்ல, தோட்டாக்கள் கூட வாங்க முடியாத மோசமான பொருளாதார சூழல். மாமா நேருவின் ஆட்சிகாலத்திலேயே நமக்கு அமெரிக்கா காரண்டி இல்லாமல் ஆயுதம் கொடுக்க முடியாது என்று சொன்னபோது, காமராஜர் அமெரிக்கன் வங்கிகளை மூடச்சொல்லியதால், அவை உத்திரவாதம் கொடுத்து நாம் தோட்டாக்களை கூட வாங்க வேண்டிய மிக மோசமான சூழல்.

2014 மோடி ஆட்சிக்கு வந்தார். எல்லா முக்கிய நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்தார். அது இந்தியா மீது அவர்கள் வைத்திருந்த புரிதலை தெரிந்துகொண்டும், அதில் வேண்டிய திருத்தங்களை செய்யபம் உதவியது. அது உலக நாடுகளிடையே இருந்த ஒரு தயக்கத்தை போக்க போட்ட பிள்ளையார் சுழி. அப்போது மோடி உலக சுற்றுலா வாசியாகி விட்டதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது வரை நம்மை ஒரு கடன்காரனாக பார்த்த OPEC நாடுகளிடம் பேரம் பேசும் தகுதி இல்லாத இருக்க காரணமாக இருந்த பெரும் கடனை கட்டி முடித்தார். அதற்கு பெட்ரோல், டீசல் மீது போட்ட வரிகள் முக்கியம். அந்த கடன்கள் கட்டி முடிக்கப்பட்டபோது இந்திய சொன்ன ஒரு விஷயம், பாகிஸ்தானுக்கு நீ உதவினால், நான் உன்னிடம் கச்சா எண்ணெய் வாங்க மாட்டேன் என்று. வேறு வழியில்லாமல் அவை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தியதுதான் பாகிஸ்தானுக்கு விழுந்த முதல் அடி.

ISIS தாக்குதலில் மேற்கத்திய நாடுகள் கூட தங்களது குடிமக்களை திரும்ப பெற முடியாமல் போனபோது, இந்தியா நம் குடிமக்களை மீட்டது. அது முதல் உக்ரைனில் இந்திய மாணவர்களை மீட்பதற்காக இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி வைக்கும் அளவிற்கு நம் முக்கியத்துவம் உலக அளவில் உயர்ந்தது. பாகிஸ்தானின் உற்ற நண்பனான உக்ரைன், இந்தியா நினைத்தால் இந்த போரை நிறுத்த முடியும் என்று சொல்லி போரை நிறுத்தச் சொல்லி கோரியது. சமீபத்தில் ஆஃப்கானிஸ்தானில் மாட்டிக்கொண்ட பணய கைதிகளை விடுவிக்கவெல்லாம் முடியாது, வேண்டுமானால பேசி பார்க்கலாம் என்று சொன்ன தலிபான்களிடம், 22 மணி நேரம் கொடுக்கிறோம். விடுதலை செய்யா விட்டால்? என்று நிறுத்தியது. 8 மணி நேரத்தில் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் விடுவிக்கப்பட்டார்கள். அதற்கு முன்பு நம் விமானக் கடத்தப்பட்டதை ஒப்பிட்டு பாருங்கள்?!

உக்ரைன் போரில் ரஷ்யாவை தனிமை படுத்த உலக நாடுகள் எதுவும் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று கட்டளை இட்ட போது, இந்தியா அதை மீறியது. இந்தியா மீது பொருளாதர தடையை விதிப்பேன் என்றது, இந்தியா கூலாக முடிந்தால் செய்துபார் என்றது. ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை செய்தது. நீங்கள் முதலில் அதை செய்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்யுங்கள் என்று மூஞ்சியில் அடித்து பதில் சொன்னது. இதுவரை இப்படி ஒரு ஆக்ரோஷமான நிலைப்பாட்டை அதன் 75 ஆண்டுகால வரலாற்றில் பார்த்திராத அமெரிக்கா, இந்தியாவில் மத சுதந்திரமில்லை என்று தனது வழக்கமான உள்குத்து வேலைய செய்தது. அது பற்றி கேட்டபோது, நம் வெளியுறவுத்துறை அமைச்சர், கருப்பின் மக்களுக்கு அமெரிக்கா கொடுக்கும் சுதந்திரம் எந்த வகை சுதந்திரம் என்று அவர்கள் மண்ணிலேயே திருப்பி கேட்டபோது அமெரிக்கா ஆடித்தான் போனது.

அதன் பின்னால் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை அதன் கூட்டமைப்பில் உள்ள நாடுகளை வைத்து மிரட்டியது. அதில் கச்சா எண்ணெய் தருவதை பற்றி யோசிப்போம் என்று பூடகமாக எச்சரித்தது. இந்தியா, நீ என்னடா என்னை எச்சரிப்பது என்று ரஷ்யாவிடம் $30 குறைவாக கச்சா எண்ணெயை இறக்கு மதி செய்தது. வெறும் 2% ரஷ்ய இறக்குமதியாக இருந்தது, சவூதியை தாண்டி இரண்டாவது பெரிய இறக்குமதியாக மாறியபோது, அதே நாடுகள் இன்று நாங்கள் ரஷ்யாவை விட குறைவாக தருகிறோம் என்று இந்திய காலில் மண்டியிட்டது. எதெற்கெடுத்தாலும் மிரட்டிய சீனா, டோக்லாமில் பூடானை மிரட்ட கால் வைத்து அசிங்கப்பட்டது. பின்பு லடாக்கில் உள் நுழைந்து பெரும் அடி வாங்கியது. அருணாச்சல பிரதேசம் என்னுடையது, அங்கே இந்தியர்கள் யாரும் சீனாவின் அனுமதியின்றி நுழையக்கூடாது என்ற எச்சரித்தது. இந்திய ஜனாதிபதி அங்கே சென்றார். இப்படி எத்தனையோ நெருக்கடிகள்? ஆனால், அதன் உண்மையான பலமான வர்த்தகத்தில் கை வத்தது இந்தியா. அதன் செல்போன்கள் உற்த்தியில் இருந்து, போர் விமானங்கள் வரை அதற்கு, தரமான பொருட்களால் போட்டியை ஏற்படுத்தி வெற்றியை பதிக்க தொடங்கியுள்ளது. அது மட்டுமா, வியட்நாம் உற்பட சீனாவின் எதிரிகளுக்கு பிரம்மோஸ் ஏவுகனைகளை கொடுத்து, சீனாவின் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியது.
கொரானாவை பரப்பிய நாடு என்று சீனா அசிங்கப்பட, அதற்கு தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்து ஃபார்மாசுட்டிகல் மாஃபியாவை மீறி கொரானாவை தடுத்த தாயுள்ளம் கொண்ட நாடு என்ற பெயரை இந்தியா வாங்கியது. இன்று தைவான் மட்டுமல்ல, திபெத்தையும் சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் வழியை முன்னெடுக்கிறது.

இலங்கை சீனாவால் திவால் ஆனபோது யாரும் உதவாதபோது, மருந்து முதல் அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவிய இந்தியாவிற்கு, அது செய்த கைமாறு ஹம்பந்தோட்டாவில் சீனாவிற்கு கொடுத்த அனுமதி. சீனாவுடன் சேர்ந்து நம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வருமோ என்று பயப்பட வில்லை, மாறாக இந்திய உதவிகள் குறைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, ஐநா சபையில் தமிழர்களுக்கான முழு சுதந்திரத்தை இலங்கை உடனே செய்தாக வேண்டும் என்று, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அழுத்தமாக தன் கோரிக்கையை எழுப்பி, உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரவேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று கோடிட்டு காட்டியுள்ளது.

நம் படை வீரர்களின் தலையை கொய்து நமக்கு பரிசாக பாகிஸ்தான் எல்லையில் கொடுத்தபோது, கையறு நிலையில் இருந்த இந்தியா, பதான் கோட்டில் நுழைந்து தீவிரவதிகளின் கூடாரத்தை தாக்கி 300+ கூண்டோடு கொன்றபோது, அதை வெளியே கூட சொல்லமுடியாமல் அசிங்கப்பட்டது பாகிஸ்தான். அதில் அமெரிக்காவின் F16 வகை விமானத்தை வெறும் Mig 21 ஆல வீழ்த்தி அமெரிக்காவிற்கு அசிங்கத்தை பரிசாக்கியது. எல்லையில் அப்பால் இருந்து தாக்கி ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டால், அங்கே நான்கு பேர் கொல்லப்படவேண்டும் என்று ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுத்தது இந்திய அரசு. பாகிஸ்தானை இஸ்லாமிய நட்பு நாடுகள் கூட பிச்சைக்காரனை பார்ப்பதுபோல பார்க்கிறார்கள் என்று அந்நாட்டின் பிரதமர் நொந்துபோய் சொன்னார். பல பிரச்சினைகள் இருந்தாலும், கடந்த காலங்களில் பாகிஸ்தான் இயற்கை பேரழிவை சந்தித்தபோது முதலில் ஆதரவுக்கரம் நீட்டியது இந்தியாதான். ஆனால் ஒவ்வொரு முறையும் முதுகில்தான் குத்தியது. அது தற்போது பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தாலும், வெறும் ட்வீட் செய்ததோடு நிறுத்திக் கொண்டது இந்தியா.

மலேஷியா முதல் துருக்கி வரை பாகிஸ்தான் பக்கம் சாய்ந்தபோது, இந்தியா கொடுத்த பதில்கள் வித்தியாசமானது. பாமாயில் இறக்குமதியை குறைத்து மலேசியாவை மண்டியிட வைத்தது. துருக்கியின் பரம எதிரியான கிரீஸுக்கு பிரம்மோஸ் ஏவகணைகளை கொடுத்து, எனக்கும் விளையாட தெரியும் என்று பதில் சொல்லியது. அமெரிகாவாலும், சீனாவாலும் நம்பி ஒப்பந்தமிட்டு வறுமையை பரிசாக வாங்கிய ஆஃப்ரிக்க நாடுகள் இன்று தன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கோருவது இந்தியாவிடம். ஒரு பக்கம் QUAD நாடுகளின் கூட்டமைப்பில் ஒத்திகை செய்யவும், லடாக்கில் அமெரிக்காவுடன் சீன எல்லையில் போர் ஒத்திகை செய்துகொண்டே ரஷ்யாவில் போர் பயிற்சி செய்ய சென்றது இந்தியா. அங்கே ரஷ்யாவிற்கும், ஜப்பானுக்கும் பிரட்சினையான தீவுகளில் நடக்கும் பயிற்சியில் கழந்து கொள்ளாமல், தவிர்த்ததை ஜப்பான் வெகுவாக பாராட்டியிருக்கிறது. இந்தியாவின் ஸ்திரமான முடிவுகளை நம் பரம வைரிகளான பாகிஸ்தானும், சீனாவும் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளும் பாராட்டி உள்ளன்.

இதெல்லாம் எப்படி நடந்தது? இந்தியா, மற்றவர்களுக்காக தனது கொள்கையை முடிவு செய்யாமல், தனது நிலைப்பாட்டிற்கு ஏற்பவே அதன் கொள்கை முடிவுகள் இருந்ததால், அதில் எந்த குழப்பமும் இல்லை. இதைத்தான் பாகிஸ்தான் முதல் ஜெர்மனி வரை பாராட்டியிருக்கிறது. அது நம்மை பலப்படுத்தலாம், ஆனால் ஏன் பாராட்டப்பட வேண்டும்? இந்தியா நியாயத்தை முன்னால் நிறுத்தி அதன்பின் கொள்கையை வகுத்தது. ஆம், அமெரிக்காவிடம் சீனாவை காட்டி கொடுத்தும், ரஷ்யவிடம் அமெரிக்காவை போட்டு கொடுத்தும் இந்தியா தனக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவில்லை. அதற்கு மாறாக, உக்ரைன் போரில் ரஷ்யா மீது தடை விதிக்க கோரியபோது, ரஷ்யாவிடம் இருந்த நியாயத்தை முன்னால் நிறுத்தி, அமெரிக்காவின் தவறுகளை நீ எப்படி அதை செய்யலாம் என்று கேட்டது. அதற்கு அமெரிக்காவால் பதில் சொல்ல முடியவில்லை. வல்லரசான அமெரிக்கா உற்பட உலகமே சீனாவை பார்த்து பயந்தபோது, சீனாவின் குரல்வளையை பிடித்து தன் வீரத்தை காட்டியது இந்தியா. மிக பலமான ஐரோப்பிய யூனியன்கள் இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து பிரிக்க முயன்றபோது, நீ அதை முதலில் செய்துவிட்டு, பின்னர் எனக்கு அறிவுரைப்பது பற்றி பேசலாம் என்றது, அதற்கு மேல் அதனால் பேச முடியவில்லை.

இன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு $21 பில்லியன் கடன் கொடுத்த சீனா, அவற்றின் துறை முகங்களையும், இயற்கை வளங்களையும் அடமானமாக எழுதி கேட்டது. ஆனால் $14 பில்லியன் கடன் கொடுத்த இந்தியா, அதன் நிலை அறிந்து மேலும் உதவுகிறது. அதனால் ஆஃப்ரிக்க நாடுகள் இந்தியாவை நம்பி அதன் இயற்கை வளங்களை கூட்டாக தொழில்.செய்ய அழைக்கிறது. ஆம், அவை அமெரிக்காவாலும், சீனாவாலும் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு, அதன் தோல்வியில் இருந்து கற்ற வறுமை எனும் பாடம் அதற்கு வழி சொல்லுகிறது.

இதெற்கெல்லாம் காரணம் இந்தியாவின் பொருளாதார, ஆயுத பலம் மட்டுல்ல. நம்மிடம் இருக்கும் நியாயம். அந்த நியாயத்தின் பின்னால் நிண்ரதால் வலிமையான அமெரிக்காவிடம் மண்டியிடவுடவுமில்லை, அரக்கனான சீனாவிடன் அஞ்சி ஒதுங்கவும் இல்லை. நேர்மையை முன் வைத்து அது யாராக இருந்தாலும் கேள்வி கேட்கும் நிலைக்கு இந்தியா உயர்ந்து உள்ளால்து. அதானால்தான் இந்தியாவை உலகத்தின் வல்லரசாக உலக நாடுகள் பார்க்காமல், உலகத்தின் குருவாகத்தான் பர்க்கிறது. இந்த குரு வெறும் நியாயம் சொல்பவன் மட்டுமல்ல, நியாயம் தவறியவனை தட்டிகேட்கும் வலிமை கொண்டதால்தான் உலகம் திரும்பி பர்க்கிறது, மதிக்கிறது, உறவுகொள்ள முன்வருகிறது.

இது ஏதும் எதேச்சையாக நடக்கவில்லை. லட்சக்கணக்கான போர் வீரர்கள் எல்லையை காக்கும்போது, தன் உயிரை பணயம் வைத்து கொரானாவில் உயிர்களை காத்தவர்கள் வரை மிகப்பெரிய சக்தி அதன் பின்னால் இருப்பதால். ஆனால் அது கடந்த காலங்களிலும் இருந்தது, அதை ஒருமுக படுத்த ஒரு தலைவர் இல்லாமால் வெற்றிடமாக இருந்த நிலை மாறி, அங்கே மோடியை கடவுள் கொடுத்தார். அதற்கு பின்னால் தோவால் போன்ற சூத்திரதாரியை கொள்கை வகுக்கவும், அதை கொண்டு சேர்க்க ஜெய்சங்கர் போன்றவர்களும், நிறைவு செய்ய அமித்ஷாவும் என்று பலரின் அரிய சாதனைகள் அபாரம்.

அவர்கள் மட்டும் இருந்தால் போதுமா, மிக மோசமான காலங்களில் பல துரோகிகளின் பேச்சுக்கு இறையாகாமல் மோடியின் பின்னால் நம்பிக்கை வைத்து அணிவகுத்த மக்களை மறக்க முடியுமா?  எப்படியோ இந்தியா உலகின் குருவாகி, ஒவ்வொரு மனிதருக்கும் மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் உற்ற துணையாக, இறையின் கருணையாக! இந்தியாவின் நோக்கம் அமெரிக்காவை போல அடுத்தவர் உழைப்பை உறிஞ்சுவதோ, சீன, அமெரிக்காவை போல நாட்டை பிடிப்பதோ அல்ல. குருவாகி நின்று உலகை இணைப்பதுதான். அங்கே எதிரெதிர் துருவங்கள் இருந்தாலும், நேர்மை தவறாத போக்கில் நின்றால் உலகின் குருவாவது முடியாததல்ல!

மீண்டும் உலகின் குருவாகி, நியாயத்தை நிலை நிறுத்த உறுதியேற்போம்!

மரு. தெய்வசிகாமணி