கொரோனா தடுப்பு மருந்து : மூக்கு வழியே செலுத்த மத்திய அரசு அனுமதி!

ம் நாட்டில் , BF.7 என்ற பேர் கொண்ட மாறுபாட்டு கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்டறிந்துள்ளனர். மீண்டும் நோய்க்கிருமி வேகமாக பரவுவதால் தனி நபர் இடைவெளி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவித்துள்ளது.இச்சூழலில் மூக்கு வழியாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் மூக்கு வழியாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படவுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தும் இன்று முதல் சேர்க்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசிகளைத் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்த அரசு அனுமதித்துள்ளது.

இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!