தரமான சிகிச்சை வழங்குவதில் இந்தியா 145வது இடம்!

தரமான சிகிச்சை வழங்குவதில் இந்தியா 145வது இடம்!

உலக அளவில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நம் இந்தியாவில் பதிவு செய்யபட்ட மொத்த டாக்டர்களின் எண்ணிக்கை சுமார் 7.5 லட்சம்தான். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல் படி 1000 மக்களுக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும். நம் நாட்டின் மொத்தம் மக்கள் தொகை 135 கோடி அதன்படி இந்தியாவில் 13.5 லட்சம் டாக்டர்கள் தேவை ஆனால் இருப்பதோ 7.5 லட்சம் பேர் மட்டுமே. உடனடியாக 5.5 லட்சம் டாக்டர்கள் தேவையுள்ள நிலையில் நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் டாக்டர்களின் மொத்த எண்ணிக்கை 52000 மட்டும்தான் என்று அண்மையில் ஒரு செய்தி வெளியான நிலையில் தரமான சிகிச்சை வழங்குவதில் இந்தியா 145 -வது இடத்தைப் பிடித்துள்ளது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியாதாக கருதப்படும் மருத்துவம் ,பல நாடுகளில் சட்டங்களில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் நம் இந்தியாவில் அப்படி அரசியல் சட்டம் இல்லை என்றாலும் சுப்ரீம் கோர்ட் பல்வேறு தீா்ப்புகளில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே லான்சாட் குளோபல் ஹெல்த் மருந்துவ இதழ் நடத்திய ஒரு ஆய்வில் சுகாதாரத்திற்கான தரம் மற்றும் சுகாதரத்திற்கான அடிப்படை தேவைகான உலக நாடுகளின் தரப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அதில், 195 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்  இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 48, இலங்கை71, பூட்டான் 134 மற்றும் பங்களதேசம் 133 அடுத்தாக இந்தியா 145 வது இடத்தை பிடித்து இருப்பது கவலையை அளித்துள்ளது.

இததனைக்கும் எச்எகீயூ எனப்படும் மருத்துவ உபகரண மதிப்பீடு 2000 ஆம் ஆண்டு முதல் 2016 வரை இந்தியாவின் முன்னேற்றங்கள் அதிகரித்த போதிலும், நாட்டின் மிக உயர்ந்த மற்றும் மிகக் குறைந்த மதிப்பெண்களுக்கு இடையிலான இடைவெளி 1990 ஆம் ஆண்டில் 23 · 4-புள்ளி வேறுபாடு மற்றும் 2016 இல் 30 · 8-புள்ளி வேறுபாடு என்று ஆய்வில் குறிப்பிடபட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டில் ஐஸ்லாந்து (97.1 புள்ளிகள்), நர்வே (96.6), நெதர்லாந்து (96.1), லக்சம்பர்க் (96.0), ஃபின்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா (ஒவ்வொன்றும் 95.9) பெற்றுள்ளது.மத்திய ஆப்பிரிக்க குடியரசு (18.6), சோமாலியா (19.0), கினியா-பிசாவு (23.4), சாட் (25.4), மற்றும் ஆப்கானிஸ்தான் (25.9) ஆகிய நாடுகளே குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளாகும்.

அதிலும் இந்த ஆய்வின் படி காசநோய், மாரடைப்பு, இதய நோய்கள், இஸ்கிமிக் இதய நோய்கள், ஸ்ட்ரோக், டெஸ்டிகுலர் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் போன்ற நோய்களால் இந்தியா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவா மற்றும் கேரளாவில் 2016 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 60 புள்ளிகளும், அசாம் மற்றும் உத்தரபிரதேசம் குறைந்தபட்சம் 40 க்கு குறைவாகவும் உள்ளன என்று தெரிய வந்துள்ளது.

Related Posts

error: Content is protected !!