பாஜக தலைவர் வெட்டிக் கொலை: ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு!

பாஜக தலைவர் வெட்டிக் கொலை: ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு!

கேரளாவில் 10 மணி நேரத்தில் இரண்டு முக்கிய அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையொட்டி ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 மணி நேரத்தில் கேரளாவின் ஆலப்புழாவில் இரண்டு கொலைகள் நடந்துள்ளது. முதலில் SDPI தலைவர் கே.எஸ்.ஷான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இன்று அதிகாலை பாஜக மாநில ஓபிசி அணி தலைவர் ரஞ்சீத் ஸ்ரீனிவாசன் என்பவரை அவரது வீட்டில் புகுந்து அடையாலம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஆலப்புழா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆலப்புழாவில் நடந்த இரண்டு கொலைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

40 வயதான பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன், அவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஓபிசி மோர்ச்சா கேரள மாநில செயலாளராகவும், பாஜக மாநிலக் குழு உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஞ்சித் ஸ்ரீனிவாசன் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆலப்புழா தொகுதியில் பாஜக வேட்பாளராக இருந்தார். அவர் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார்.

பாஜக பிரமுகர் கொல்லப்பட்டதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் முரளிதரன், இது இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவின் கையாலாகத்தனமான செயல் என்று கூறியுள்ளார். மேலும், குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பாஜக ஓபிசி மோர்ச்சாவின் மாநிலச் செயலர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் காரணமான பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) இருப்பதாக குற்றம்சாற்றியுள்ளார்.

அதே சமயம் இதையொட்டி ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!