மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி வ

மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி வ

பனாமாவில் உள்ள டேரியன் இடைவெளி வழியாக பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த 300 பேர், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேற மெக்சிகோவை அடைந்தவர்களை  அந்நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத 311 இந்தியர்களை, அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

வாழ்வாதாரம் தேடி மெக்சிகோவில் இருந்து பல்வேறு மக்கள் அமெரிக்கா நாட்டிற்குள் நுழைய முற்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மெக்சிகோ அமெரிக்கா எல்லை பகுதிகள் வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களை டிரம்ப் அரசு சிறையில் அடைத்து வந்தது. மேலும் அடைக்கலம் தேடி வருபவர்களை எல்லை பகுதியிலேயே தடுத்து நிறுத்துமாறு குடியுரிமைத் துறை அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டார். மெக்சிகோவின் எல்லைகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் மக்கள் மீது மெக்சிகோ அரசு நடவடிக்கை எடுக்காவிடில், மெக்சிகோ வின் அனைத்து இறக்குமதி பொருட்கள் மீதான வரிகள் அதிகமாக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜூன் மாதம் அச்சுறுத்தித்தினார். இதையடுத்து மெக்சிகோ குடியுரிமைத்துறை அதிகாரிகள் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் மெக்சிகோ நாட்டில் , உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியிருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனிடையே, நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் ஏராளமான சீக்கியர்கள் இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் சென்று அங்கேயே தங்கி விட்டனர். அங்கு வெற்றிகரமாக வரத்தகம் செய்யும் இவர்கள் பெரும் பணக்காரர்களாகவும் உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாகவே பஞ்சாபில் இருந்து ஏராளமானோர் அமெரிக்காவிற்கு செல்கின்றனர். படித்தவர்கள், மென்பொருள் பொறியாளர்கள் போன்றவர்களுக்கு அமெரிக்கா செல்ல எளிதில் விசா கிடைத்து விடுகிறது. ஆனால் ஹோட்டல் போன்ற வணிகம் செய்யும் நோக்கத்துடன் அங்கு செல்ல விரும்பும் பஞ்சாபியர் களுக்கு விசா எளிதில் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் சட்டவிரோதமான முறையில் அங்கு செல்ல முற்படுகின்றனர்.

பல நாடுகளுக்கு மாறி மாறி சென்று, அமெரிக்க விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு உள்ளே நுழைவது எளிதான காரியம் அல்ல. இவ்வாறு சட்ட விரோதமாக செல்பவர்களை அழைத்து செல்ல பஞ்சாபில் பெரிய குழுக்கள் செயல் படுகின்றன. இவர்கள் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைய பல லட்சம் செலவு செய்கின்றனர்.

அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் கையில் சிக்கி சிறை சென்ற பஞ்சாபியர்களை மீட்க அமெரிக்கா வில் பெரிய குழுவே செயல்படுகிறது. இவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் வழக்கு நடத்தி அவர்கள் வெளியே வந்து விடுகின்றனர்.

இந்நிலையில்தான் மெக்சிகோ நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கான அனுமதி இல்லாமல் தங்கி இருந்த 311 இந்தியர்களை டோலுகா நகரிலிருந்து போயிங் 747 விமானத்தின் மூலம் டெல்லிக்கு திருப்பி அனுப்பியது. இவர்கள் அனைவரும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 311 இந்தியர்களை, சிறப்பு விமானம் மூலம் மெக்சிகோ அரசு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இதுபோன்று இந்தியாவுக்கு அவர்கள் திருப்பி அனுப்பப்படுவது இது முதல்முறையாகும்.

error: Content is protected !!