August 2, 2021

தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று!

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் 6 லட்சத்துக்கு அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு. 13,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இம்ரான் கான், வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதே சமயம் ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்து சூழலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமைதான் இம்ரான்கான் சீன நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் இம்ரான் கானுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் உள்ள பிரதமருக்கே கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை எண்ணி பாகிஸ்தான் மக்கள் கவலை கொண்டுள்ளனர். அவர் எடுத்துக் கொண்ட கொரோனா தடுப்பூசி சீனாவின் சினோபார்ம் மருந்து என்பது குறிப்பிடத்தக்கது