பாக். பிரதமராகப் போகும் இம்ரான்கான் ஆர்மியின் சொல்படித்தான் நடப்பார்! – ரேஹம் கான் கருத்து!

பாக். பிரதமராகப் போகும் இம்ரான்கான் ஆர்மியின் சொல்படித்தான் நடப்பார்! – ரேஹம் கான் கருத்து!

பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலை தொடர்ந்து அங்குள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இம்ரான் கானின் வெற்றியை விமர்சித்து வருகிறார்கள். இம்ரான் கானுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை உதவி யதாகவும் குற்றம் சாட்டியுள்ளன. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்த நிலையில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்துக்கு ஐ. நா.சபை ஆதரவு அளித்துள்ளது. பல இடங்களீல் குண்டுவெடிப்பு கள் நிகழ்ந்தும் ஜனநாயக கடமையாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று தங்கள் வாக்கைப் பதிவிட்ட பாகிஸ் தானின் மக்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு வாழ்த்துகள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்டு 14ம் தேதிக்கு முன் பாகிஸ் தானின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பார் என்று பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நயினால் ஹக் தெரிவித்தார். அதே சமயம் இம்ரான் கானை ஆட்சிக்குக் கொண்டு வரும் திட்டம் 2-3 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்று கூறும் இம்ரானின் முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான், இம்ரானுக்கு பல சிக்கலான விஷயங்கள் புரியாது, ராணுவத்தின் சொல்படிதான் அவர் நடப்பார் என்று திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.

கடந்த ஜூலை 25 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனி பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் சில கட்சிகளின் ஆதரவு இல்லாமல், இம்ரான் கானால் ஆட்சியமைக்க இயலாது. இந்நிலையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் நயீனுல் ஹாக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில்,”நாங்கள் எங்களுடைய பணிகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டோம்.

வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் இம்ரான் கான் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்பார்” என்று தெரிவித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 தொகுதிகளை கைப்பற்றியது. நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் –நவாஸ் கட்சி 64 இடங்களையும், முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களையும் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பத்திரிக்கையாளருமான ரேஹம் கான், இந்திய பத்திரிக் கைக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் இப்படிதான் இருக்கும் என்று ஏற்கனவே எனக்கு தெரியும். தேர்தல் முறையாகவும், நியாயமானதாகவும் நடந்து இருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. கைபர் பதுன்க்வா பிராந்தியத்தில் இம்ரான் கானின் கட்சியை பற்றி அறிந்திராத நிலையில், அக்கட்சியின் வெற்றி சாத்தியமே கிடையாது.இதுபோன்று லாகூர், கராச்சியில் கூட அனுபவமிக்க வேட்பாளர்கள், அடையாளமே இல்லாத இம்ரான் கான் கட்சியின் வேட்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர் என்பதை நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் இந்தியா மற்றும் சீனா கொள்கையில் தன்னிச்சையாக செயல்பட்டார், அதனால்தான் ராணுவத்தின் அதிருப்தியை சம்பாதித்தார். இப்போதைய நிலையில் இம்ரான் கான், ராணுவத்தால் ஆட்டிவைக்கும் வகையிலான தலையாட்டி பொம்மைதான் இம்ரான் கான். சிக்கலான விஷயங்களில் அவருக்கு எந்த ஒரு அறிவும் கிடையாது, ராணுவத்தின் சொல்படிதான் இம்ரான் கான் நடந்தாக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ரேஹம் கான்.

error: Content is protected !!