பெங்களூரு ஏர்போர்ட்டில் இளையராஜாவுக்கு அவமதிப்பு!

பெங்களூரு ஏர்போர்ட்டில் இளையராஜாவுக்கு அவமதிப்பு!

இசை ஞானி இளையராஜா தனது மகன் கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினருடன் மங்களுர் பகுதியில் உள்ள கோயில்களுக்கு தரிசனம் செய்ய சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்னை திரும்புவதற்காக பெஙகளூரு ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், இளையராஜாவின் பையை சோதனையிட்டனர். அதில் சாமிக்கு அர்ச்சனை செய்து உடைத்த தேங்காய்கள் இருந்துள்ளது. அதை பார்த்த அதிகாரிகளுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே, இளையராஜாவையும், அவரது குடும்பத்தினரையும் தனியாக நிற்க வைத்தனர்.

raja

மேலும் அவர்களது உடைமைகள் அனைத்தையும் ஸ்கேன் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு இளையராஜாவுடன் வந்தவர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த அதிகாரிகளையும், விமான நிலைய பாதுகாப்பு போலீசாரையும் இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஒரு அதிகாரிக்கும் கார்த்திக் ராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கார்த்திக் ராஜா எடுத்த படத்தை அழித்த பிறகுதான் விட முடியும் என்று பிடிவாதமாக இருந்தார்.

அப்போது எதேச்சையாக அங்கு வந்த தொலைகாட்சி நிருபர் ஒருவர் அதிகாரிகளிடம் சென்று சமாதானம் செய்தார். இளையராஜா மிகப் பெரிய இசை அமைப்பாளர் என்றும், அவர் ஏராளமான தேசிய விருதுகளை பெற்றவர் என்றும் அந்த அதிகாரியிடம் விளக்கியுள்ளார். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு இளையராஜா குடும்பத்தினரை அதிகாரிகள் விமானத்துக்கு செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவம் இரவு 10.30 முதல் 11.45 வரை நடந்தது. இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்ட பிறகுதான் நிலைமை சுமூகமாக முடிந்தது என்று அந்த தொலைகாட்சி நிருபர் தெரிவித்தார்.இந்த சம்பவம் பெங்களூரு ஏர்போர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.இளையராஜா அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிடெடோர் காட்டாமான அறிக்கை மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.-

error: Content is protected !!