September 21, 2021

IIPM கல்வி நிறுவனம் மீது எஃப் ஐ ஆர்! – டெல்லி போலீஸ் அதிரடி

டாப் கம்பெனிகளை நிர்வகிக்க பயன்படும் M.B.A. பட்டப் படிப்பு மோகம் குறைந்திருந்தாலும், அதன் மீதுள்ள ஆசை அல்லது இன்னும் ஈர்ப்பு விலகவில்லை. ஆனால் மேலாண்மை படிப்பின் வெற்றி என்பது ஒரு மாணவனின் தகுதி, திறன், திறமை சார்ந்து இருப்பதால் மற்ற நிறுவனங்கள் I.I.M நிறுவனத்தை போல தாங்களும் நிகரானவர்கள், அவர்களை போல மாணவர்களை உருவாக்க முடியும் என்று விளம்பரபடுத்தி, M.B.A. பட்ட மோகத்தை வைத்து வியாபாரம் செய்து ”கல்லா” கட்டுகின்றன. இது எல்லா நிறுவங்களுக்கு பொருந்தாது. நல்ல மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இருந்தாலும், பெரும்பாலனவைகள் இந்த “மேலாண்மை வியாபாரம்” செய்கிறார்கள்.
iipm ad
அப்படி மேலாண்மை வியாபாரம் செய்ய புறப்பட்ட ஒரு நிறுவனம் தான் IIPM- INDIAN INSTITUTE OF PLANNING AND MANAGEMENT http://www.iipm.edu/. இதின் நிறுவனர் ARINDAHM CHAUDHARI. ஆங்கில பத்திரிக்கைகளை படிப்பவர்களுக்கு இந்த IIPM- நிறுவனம் நல்ல பரிச்சயமாக இருக்கும். அனைத்து ஆங்கில பத்திரிக்கைகளில் இந்த நிறுவனத்தின் வண்ண வண்ண விளம்பரங்கள் வரும். அந்த விளம்பரங்களின் உள்ளடக்கம் இதுவாகத்தான் இருக்கும்.-

*அந்த நிறுவனம் BBA மற்றும் MBA பட்டங்கள் அளிக்கும்.

*அந்த நிறுவனத்தின் “பாடத்திட்டங்கள்” IIM விடச் சிறப்பானது.

*வெளிநாட்டு பட்டங்களும், பல்கலைகழகத்தின் நிறுவனங்களின் அங்கீகாரமும் கிடைக்கும்.

*மாணவர்கள் நல்ல நிறுவங்களின் வேலைக்கு அமர்த்தபடும்.

*அந்த நிறுவனத்தின் கட்டமைப்பு உலகத் தர்ம வாய்ந்தது.

இப்படி புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 18 கிளைகள் உள்ளன. இந்நிலையில், அக்கல்வி நிறுவனத்தின் நிறுவனர் அரிந்தம் சவுத்ரி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என்பதற்கு டெல்லி கூடுதல் குற்றவியல் ஆணையர் ரவீந்திர யாதவ்,”நாங்கள் IIPM நிறுவனர் அரிந்தம் சவுத்ரி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420-ன் கீழ் FIR பதிவு செய்துள்ளோம். அவரது தந்தையாரும், IIPM இயக்குனருமான மயிலேந்திர கிஸோர் சவுத்ரி மீதும் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. IIPM மேலாண்மை கல்வி நிறுவனமானது எவ்வித அங்கீகாரத்தையும் பெறவில்லை. அங்கீகாரம் பெறாமலேயே பல கவர்ச்சிகரமான கோர்ஸ்களை நடத்தி மாணவர்களை தவறாக வழிநடத்தும் வகையில் ஏமாற்றி வருவதாக பல்கலைக்கழக மானியக்குழு (UGC) எங்களிடம் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த FIR-ஐ பதிவு செய்துள்ளோம். புகார் குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது”என்று ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.

ஆனால், இந்த புகாரை IIPM மறுத்துள்ளது. ”UGC மற்றும் AICTE இரண்டு அமைப்புகளும் எங்களை குறிவைத்தே அவதூறுகளை பரப்பி வருகின்றன. நாங்கள் ஒருபோதும் எங்கள் கல்வி நிறுவனத்தை அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக கூறியதே கிடையாது. அதேபோல நாங்கள் டிகிரியை வழங்குவதாக சொல்லியதும் கிடையாது. நாங்கள் சான்றிதழ்களை மட்டுமே கொடுக்கிறோம். 1970-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை இதை எங்கள் பிராஸ்பக்டஸில் எழுத்துபூர்வமாகவே போட்டிருக்கிறோம். எங்களது வெப்சைட்டிலும் இதை தெரிவித்திருக்கிறோம். எனினும், நோட்டீசுக்கு மதிப்பளித்து போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்போம் ”என IIPM தெரிவித்துள்ளது.

”மேற்படி விளம்பரங்கள் அதிக செலவில், அனேகமாக அனைத்து ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வரும். இந்த விளம்பரத்தை பார்த்து நம்பி, மூன்றாம் அடுக்கு நகரம் மற்றும் கிராமத்திலிருக்கும் ஏழைக்குடும்பங்களின் மாணவர்கள் சேருவார்கள். ஒரு பட்டத்திற்கு சுமார் 10 இலட்சம் செலவானாலும் தங்கள் பையன் ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தின் M.B.A. பட்டம் பெற்று நல்ல கம்பெனியில் வேலைக்குச் சேருவான் என்ற ஆசையினால், சொத்துகளை விற்று அல்லது கடன் வாங்கி IIPM யில் சேருவார்கள்.

இந்த ஆசையை IIPM நன்றாக பயன்படுத்திக் கொண்டு 2009 வருடம் வரை நல்ல காசு சம்பாதிக்கிறது. அதன பலமே அது வெளியிடும் பத்திரிக்கை விளம்பரமும் அதன் உரிமையாளர் ARINDAHAM CHAUDHARI செய்யும் விளம்பரமும் அவர் மீது செய்யும் விளம்பரமும் தான்” என்று காட்டமாக கூறிய டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர்,”இது போன்ற மோசடி விளம்பரங்களை பிரசுரிக்கும் பத்திரிகை நிறுவனங்கள் மீதும் எஃப் ஐ ஆர் போட முடியுமா என்று ஆலோசித்து வருகிறோம்: என்று தெரிவித்தார்.