‘ப்ளூவேல்’அட்மினை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு

‘ப்ளூவேல்’அட்மினை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு

உலகம் முழுவதும் உயிரை குடித்து வரும் ப்ளூவேல் எனும் உயிர்க்கொல்லி விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளையாட்டால் சமீபத்தில் மதுரை சேர்ந்த விக்னேஷ் என்ற சிறுவன் பலியான சம்பவம் சமீபத்தில் தமிழகத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, யார் ப்ளூவெல் விளையாட்டை பரப்புவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ப்ளுவேல் விளையாட்டின் அட்மின் குறித்த தகவல்களை சைபர் கிரைம் போலீசாருக்கு 079-22871917 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்‌கலாம் என‌ குஜராத் மாநில‌ உள்துறை அமைச்சர் பிரதீப் சிங்க் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் அவர்களது விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ப்ளுவேல் விபரீத விளையாட்டினை தடை செய்ய மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநில‌ உள்துறை அமைச்சர் பிரதீப் சிங்க் ஜடேஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!