தன்னை தமிழன் என்று சொல்லி பெருமைப்பட்ட ராம் ஜெத்மலானி காலமானார்!

ராம் ஜெத்மலானி செப்டம்பர் 14, 1923 பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள சிக்கார்பூரில் பிறந்த வர், இந்தியாவின் ஒரு முன்னணி வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார்.இந்திய சட்ட அமைச் சராகவும் வழக்கறிஞரவைகளின் தலைவராகவும் பல பதவிகளில் பணியாற்றியி இருக்கிறார். பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் பங்கேற்று விமர்சனங்களை மேற்கொண்டுள்ளார்.

ராம்ஜெத் மலானி 18 வயதிலேயே வழக்கறிஞரானார். அவர் 13 வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார். 17 வயதில் சட்டப்படிப்பை முடித்தார். அந்தக் காலத்தில் 21 வயதிலேயே வழக்கறிஞராக முடியும். ஆனால் ராம்ஜெத் மலானிக்காக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் 17 வயதிலேயே வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டது.

முதல் வழக்கு..

1959-ல் மகாராஷ்டிரா அரசுக்கும் நானாவி என்ற தனி நபருக்கும் இடையேயான வழக்கே அவரின் முதல் வழக்கு. இந்த வழக்கு தேசமே கூர்ந்து கவனித்தது.

இந்தியப் பிரிவினை வரை தனது சொந்த ஊரிலும் (தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது), பிற்பாடு மும்பையிலும் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரத்னா என்ற மனைவியும் (முதல் மனைவி 1947ல் திருமணம்), துர்க்கா என்ற மனைவியும் (2வது மனைவி) இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களுள் மகேஸ் மற்றும் இராணி ஆகியோரும் பிரபலமான வழக்கறிஞர்கள் ஆவார்கள்.

மும்பையிலின்று இவர் ஆறாவது மற்றும் ஏழாவது மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்டார். அடல் பிகாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் 2004 -ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2010 -ம் ஆண்டு மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த இவர், மாநிலங்களவைக்கு அக்கட்சியின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்டார்.

இந்திய வழக்கறிஞர்களிலேயே மிகக்கூடுதலான ஊதியம் பெறுபவராகவும் அறியப்பபட்டார்.

“அடிப்படையில் நானும் ஒரு தமிழன் தான் தெரியுங்களா?” என்று சிரித்தார் ராம்ஜெத்மலானி.

“என்ன சார் சொல்கிறீர்கள்”

“ஆமாம். என்னுடைய அம்மா சுத்தமான தமிழச்சி. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அப்பா வடநாட்டுக்காரர். இருவருக்கும் காதல். திருமணத்தில் முடிந்தது.  ஏனென்று தெரியவில்லை, எனக்கு தமிழை சரியாக கற்றுத் தராமல் விட்டுவிட்டார்கள். நானும் தமிழ் தெரியாமலேயே வளர்த்துவிட்டேன். அதனால்தான் என்னையும் அறியாமல் தமிழ் மீது, தமிழகத்தின் மீது ஒரு பாசம் ஊடாடி வருகிறது” என்று கூறி சிரித்தபோது எனக்கு வியப்பு தாளவில்லை.

-திருச்சி வேலுச்சாமி, “ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்” என்ற நூலில் இருந்து..

இப்படியாப்பட்டவர் 95 வயதாகும் அவர் டெல்லியில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்காக கடுமையான சட்ட போராட்டம் நடத்தியவர்  இவர். மேலும் ன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை வழக்கு, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சர் அத்வானிக்கு எதிரான ஹவாலா பணப்பரிவர்த்தனை வழக்கு, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனது வாத திறமையினை வெளிப்படுத்தியது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தது.

அதே போல், பங்குச் சந்தை மோசடி வழக்கில் ஹர்ஷத் மேத்தா மற்றும் கேதன் பரேக் ஆகியோரை ஆதரித்தது, அப்சல் குருவுக்கு மரண தண்டனையை ஆதரித்தது, ஜெசிகா லால் கொலை வழக்கில் மனு சர்மாவை பிரதிநிதித்துவப்படுத்தியது, தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்காக ஆஜரானது, 2 ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்காக ஆஜரானது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடியது என பல முக்கிய வழக்குகளில் தனது வாத திறமையினை வெளிப்படுத்தியுள்ளார்.

இவைத் தவிர, தற்போதைய ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சிபிஐ வழக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா பண மோசடி வழக்கு, ஆசாரம் பாபு பாலியல் குற்ற வழக்கு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்குகளில் ஆஜராகி வாதாடிய தனது வாத திறமையினை வெளிப் படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது..