September 25, 2021

’ஐஸ் ஏஜ்’ அனிமேஷன் படத்தின் 5ஆம் பாகம் வரப் போகுதுங்கோ!

நம்ம,இந்திய சினிமாவை எடுத்துக்கொண்டால் குழந்தைகளைக் கவரும் படங்கள் திரைக்கு வருவது மிக மிக அரிது. ஆனால், இது மிகவும் தவறான ஃபார்முலாவாகவே திரைப்பட விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. இந்த சூட்சமத்தை தெளிவாக புரிந்துகொண்ட ஹாலிவுட் சினிமா எப்போதுமே குழந்தைகளைக் கவரும் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும். ஏனெனில், ஒரு பாலினத்தவரையோ, இளம் வயதினரையோ அல்லது அறிவியல் சார்ந்த விஷயங்களையோ மையக்கதையாக வைத்து படம் எடுத்தால் அந்தந்த விஷயங்களில் ஈடுபாடு கொண்ட பிரியர்கள் மட்டுமே திரையரங்கில் படத்தைக் காண்பார்கள். இவர்களில் 70% பிரியர்கள் தனியாக திரையரங்கிற்கு சென்றும், 30% நண்பர்களுடன் சென்றும் படத்தை பார்த்து ரசிக்கின்றனர்.

ice age july 10

ஆனால், குழந்தைகளைக் கவரும் படங்கள் திரைக்கு வந்தால் தனது பெற்றோரையும் தன்னுடன் சேர்த்து திரையரங்கத்திற்கு இழுத்துக்கொண்டு வந்துவிடுகிறது இந்த பொல்லாத செல்லக்குழந்தைகள். இதனால், ஒரு டிக்கெட்டுக்கு கிடைக்க வேண்டிய பணம், பெற்றோர்களையும் சேர்த்து 3 டிக்கெட்டுகளுக்கான பணமாக கிடைக்கிறது. இதன் காரணமாகவே ஹாலிவுட் சினிமா இன்றும் உலகளவில் வசூல் வீரனாக வலம் வந்துகொண்டிருக்கிறது. இதனிடையே உலகளவில் குழந்தைகளை பெரிதும் கவர்ந்த ஹாலிவுட் படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பது ‘ஐஸ் ஏஜ்’ திரைப்படம்தான். ஒருபுறம் அனிமேஷன் விருந்து படைக்க, மறுபுறம் பிரபல ஹாலிவுட் திரை நட்சத்திரங்களின் குரல்களில் படத்தின் கதாபாத்திரங்கள் மெருகேறுகின்றன.

2002-ஆம் ஆண்டு ‘Ice Age’ என்கிற animation படம் வெளியாகி, மிக பெரிய வெற்றியையை கண்டது. அதைத் தொடர்ந்து, 2006-இல் ‘Ice Age: Melt Down’ என்கிற அதன் இரண்டாம் பதிப்பு வெளிவந்து மீண்டும் வெற்றி வாகை சூடியது! 2009-இல் 3ம் பாகம் ‘Ice Age:Dawn of the Dinosaurs’ வெளியாகி அதுவும் ஹிட் ஆனது! அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Ice Age: Continental Drift’ 3D வடிவில் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

நான்கு வருடத்திற்கு பிறகு, 2016-இல், ‘Ice Age: Collision Course’ திரைப்படம், 3D மற்றும் 2D பரிமாணங்களில், வரும் ஜூலை 15ல் வெளியாக உள்ளது. இந்தியாவில் வெளியான ஒரு வாரம் கழித்து அதாவது 22ஆம் தேதி அமெரிக்காவில் திரைக்கு வரவுள்ளது இப்படம்.

முன்பு வெளிவந்த பதிப்புகளை விட, இதில் காட்சிகள், வெகு சிறப்பாக உருவாக்கபட்டுள்ளதாம்! 2012-இல் வெளிவந்த நான்காம் பாகத்தின் தொடர்ச்சியாம் இப்படம். 94 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இதனை, Mike Thurmeier மற்றும் Galen T. Chu ஆகிய இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர். John Debney இசை அமைக்க, Renato Falcao ஒளிப்பதிவு செய்துள்ளார். James Palumbo படத்தை தொகுத்துள்ளார். Fox Star Studios நிறுவனத்தின் உருவாக்கம் இப்படம்.

இந்த படத்திற்கும் முந்தைய பாகங்களைப் போலவே ரே ரோமனோ, ஜெனிஃபர் லோபஸ், சிமோன் பெக், மற்றும் க்றிஸ் வெட்ஜ் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். மேலும், இந்த பாகத்தில் வரும் புதிய கதாபாத்திரங் களுக்காக ஜெஸ்ஸி டேலர் ஃபெர்குஸன், ஆடம் டெவைன், மைக்கேல் ஸ்ட்ரான் மற்றும் மேக்ஸ் க்ரீன்ஃபீல்டு உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் பின்னணி குரல் கொடுத்து மேற்கண்டவர்களுடன் புதியவர்களாக இணைந்துள்ளனர்.

Scrat (Chris Wedge, குரல் வளம்!) என்கிற அணில் ஒன்று, தனக்கு மிகவும் விருப்பமான Acron என்கிற ஒரு பருப்பு மிகுந்த கனி ஒன்றினை தேடி செல்லும் தருணம், ஆர்வ கோளாறு காரணமாக, பூமியின் முகப்பை தாண்டி செல்ல, அதனால் அதிர்வுகள் உண்டாகின்றன! Sid (John Leguizamo, குரல்) என்கிற ஓர் அமெரிக்க உயிரினம்(மரங்களில் வாழ்பவை), Manny (Ray Romano, குரல்), என்கிற யானை, Deigo(Denis Leary) என்கிற ஒரு புலி, இன்னும் இதர உயிரினங்கள், தங்களது உறைவிடங்களிலிருந்து அகன்று செல்ல வேண்டிய அவசியம் உருவாகிறது. இதன் விளைவாக, எழும் அவற்றின் பயணம், நகைச்சுவை, சோகம் என பலவகை அனுபவங்களை அள்ளி தருமாம் இப்படம்.