October 19, 2021

ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் இன்னிக்கு தொடக்கம்!

8-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த தொடர் வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களையும் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். லீக் ஆட்டங்கள் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறுள்ளது. 13-ம் தேதி ஓய்வு நாளாகும். 14-ம் தேதி தேதி கார்டிப் நகரில் முதல் அரை இறுதி ஆட்டமும், 15-ம் தேதி பர்மிங்காமில் 2-வது அரை இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது. கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டம் 18-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்  பட்டால் மறுநாள் (19-ம் தேதி) நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடக்க நாளான இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, வங்கதேச அணியுடன் மோதுகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதல் முறையாக தமிழில் தொடங்கப்பட்டுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சானலில் இந்த தொடரின் அனைத்து ஆட்டங் களையும் தமிழ் வர்ணணையில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
மேலும் இக்கோப்பைக்கான போட்டியில் பங்கு கொள்ளும் அணி மற்றும் வீரரகள் விவரம் இதோ:
இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, டோனி (விக்கெட் கீப்பர்), யுவராஜ்சிங், கேதர் ஜாதவ், ரஹானே, ஹர்திக் பாண்ட்யா, ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்) டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், ஜான் ஹேஸ்டிங்ஸ், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா.
இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோ, ஜாக்பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹாலெஸ், பிளங்கெட், அடில் ரஷித், ஜோரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்,
நியூசிலாந்து: கனே வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், லுக் ரோஞ்ச் (விக்கெட் கீப்பர்), நீல் புரூம், ஜேம்ஸ் நீ‌ஷம், கிரான்ட்ஹோம், கோரி ஆண்டர்சன், மிட்செல் சான்ட்னெர், ஜீத்தன் பட்டேல், ஆடம் மில்னே, மெக்லெனஹான், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.
பாகிஸ்தான்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், அசார் அலி, பாபர் அசாம், பஷீம் அஷ்ரப், பஹார் ஜமான், ஹரிஸ் சோகைல், ஹசன் அலி, இமாத் வாசிம், ஜூனைத்கான், முகமது அமிர், முகமது ஹபீஸ், ஷாதப் கான், சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ், உமர் அக்மல்.
தென்ஆப்பிரிக்கா: டிவில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, பெஹர்டைன், குயின்டன் டி காக், டுமினி, பாப் டுபிளிஸ்சிஸ், இம்ரான் தாஹிர், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், பார்னல், பெலக்வாயோ, பிரிட்டோரியஸ், காஜிசோ ரபடா.
இலங்கை: ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), உபுல் தரங்கா, சண்டிமால், டிக்வெல்லா, நுவான் பிரதீப், குணரத்னே, கபுகேதரா, நுவான் குலசேகரா, சுரங்கா லக்மல், மலிங்கா, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, திசரா பெரேரா, பிரசன்னா, சன்டகன்.
வங்காளதேசம்: மோர்தசா (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ், சவுமியா சர்கார், சபிர் ரஹ்மான், மக்முதுல்லா ரியாத், ‌ஷகிப் அல்–ஹசன், முஷ்பிகுர் ரஹிம், ருபெல் ஹூசைன், முஸ்தாபிகுர் ரஹமான், தஸ்கின் அகமது, மெஹதி ஹசன், மொசாடெக் ஹூசைன், சன்ஜாமுல் இஸ்லாம், ‌ஷபியுல் இஸ்லாம்.