January 27, 2023

நான் ஃபீல்டுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிடுச்சா? யுவன்-னுக்கே ஆச்சரியம்!

யூத்களின் பேவரேட் மியூசிக் டைரக்டரான யுவன் ஷங்கர் ராஜா-வுக்கு. ஸ்டார் நடிகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளமே உண்டு . ஒரு வரியில் சொல்வதானல் 80 மற்றும் 90 களின் ரசிகர்களுக்கு எப்படி இளையராஜாவே அதே போல் தற்போதைய ஜெனரேஷன் ரசிகர்களுக்கு யுவன். ஆனால் இந்த யுவன் திரைத்துறையில் 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

இதை அடுத்து யுவன் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “”எல்லாப் புகழும் நன்றியும் கடவுளுக்கு மட்டுமே. அவருடைய ஆசீர்வாதத்தாலும், அனுக்கிரகத்தாலும், நன்மை/நற்செயல்களை முழுமைப்படுத்தியவர். எல்லாப் புகழும் எல்லாச் சூழலிலும் இறைவனுக்கே. முதலிலும் முக்கியமானதுமாக. என் ரசிகர்கள். விசுவாசிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது நன்றியையும் அன்பையும் தெரிவிக்கிறேன், நீங்கள் அனைவரும் இல்லாமல், நான் இந்த இடத்தில் இருந்திருக்க முடியாது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்காகவும் உங்கள் அனைவருக்காகவும் நான் விரும்பியதைச் செய்கிறேன் நன்றி. என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து. என்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக என் மீது நம்பிக்கையையும் வைத்தவர்கள். என்னை இந்த இடத்தில் வைத்திருக்கும் உங்கள் பார்வை இல்லாமல், இசையின் மீதான எனது அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு இருந்திருக்காது. மேலும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புக்கும் நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

16 வயதில் அரவிந்தன் படத்தில் ஆரம்பித்தது முதல் தற்போது வலிமை படத்திற்கு நான் இசையமைத்த பாடல்கள் மற்றும் இன்னும் வெளிவராத அனைத்து புதிய இசை வரை, இதுவரையிலான பயணம் மிகப்பெரியது மற்றும் மேஜிக் போன்றது. என் ரசிகர்களும் நலம் விரும்பிகளும் வாழ்த்துகிறார்கள். அவர்களின் தளராத ஆதரவுடன், அதற்கு நான் நன்றி சொல்லாமல் ஒரு நாள் கூட செல்லவில்லை. இக்கணத்தில் என் தந்தையின் தாக்கத்தை நான் ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். என்னை விட என் வாழ்வில் அவர் அதிக செல்வாக்கு பெற்றுள்ளார், மற்ற சிறந்த இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து என்னை ஊக்கப்படுத்திய வழி அளவிட முடியாதது. அவர் மகனாக இருப்பதில் மரியாதைக்குரியவன் ஆக்கியுள்ளேன்.

எனது வாழ்க்கையில் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை வெளிப்படுத்தும் போது, ​​நான் நேர்மையாக தெளிவாகச் சொல்லக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், உங்கள் அன்புக்கும் பாசத்திற்கும் தகுதியான இசையை உருவாக்குவதை நான் நோக்கமாகக் கொண்டுள்ளேன். கடந்த 25 வருடங்களாக என் மீது நல்லெண்ணத்தைப் பொழிந்த குடும்பம், திரையுலகினர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘BGM King’ மற்றும் ‘லிட்டில் மேஸ்ட்ரோ’ என்ற உங்களது பட்டத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.

இதுவரை நான் வைத்திருக்கும் உயரத்தை என்னால் அளவிட முடியவில்லை. விருதுகள் எனக்கு அதிகம் இல்லை, ஆனால் எனது ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது எனக்கு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது, இது என்னைத் தொடர்ந்து செல்ல தூண்டுகிறது என்னை ஆக்கியதற்கு உங்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், ஊடகவாசிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை தந்தார்.

யுவன் சொன்ன ஹைலைட் பாயிண்ட்ஸ் இதோ!

🎼இந்த 25 ஆண்டுகள் வேகமாக சென்றுவிட்டது. இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டதா என தோன்றுகிறது! இந்த பயணத்தில் துணை நின்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், என்னுடன் பணியாற்றிய இசை தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள்

🎼என் அம்மாவை மிஸ் செய்கிறேன். ஆனால், அந்த இடத்தை என் மனைவியும், என் மகளும் சரியாக பூர்த்தி செய்துவிட்டனர். அந்த வெற்றிடம் இப்போது இல்லை என நம்புகிறேன். இறைவனுக்கு நன்றி

🎼25 ஆண்டுகள் ஆகிவிட்டது என அப்பாவிடம் சொன்னபோது, அவர் “ஓ அப்படியா” என கேட்டார்

🎼நடிப்பதில் ஆர்வமில்லை. இசை ஆல்பங்களில் அவ்வப்போது தோன்றுவேன். ஆனால், நடிக்கப்போவதில்லை

🎼இசையமைப்பதை தவிர்த்து, படங்கள் தயாரித்து வருகிறோம். அடுத்ததாக, ஒரு கதை எழுதி இருக்கிறேன். ஹீரோ இல்லை. பெண் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு கதை. விரைவில் இயக்க இருக்கிறேன். அது தொடர்பான அப்டேட்டை பிறகு சொல்கிறேன்

🎼பழைய யுவனை தேடிச் சென்றதில்லை. அடுத்து மாறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்து, எனது இசையை மேம்படுத்தி கொண்டிருக்கிறேன். கடந்து சென்றதை திரும்பிப் பார்ப்பதில்லை

🎼இத்தனை ஆண்டுகள் கடந்தும் எனக்கு விருதுகளைவிட ரசிகர்களின் அன்பை முக்கியமானதாகவும், போதுமானதாகவும் கருதுகிறேன்

🎼யூட்யூப் நம்பர்கள்தான் ஒரு பாடல் ஹிட்டா இல்லையா என்பதை முடிவு செய்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை எங்கோ ஒரு டீ கடையில் என் பாடலை ரசித்து கேட்கிறார்கள் என்றால் அதுவே அந்த பாடல் ஹிட் என்பதை உணர்த்துவாக கருதுகிறேன்

நா. முத்துகுமாரின் இடத்தை யாராலும் நிரப்பிட முடியாது. அவரை மிஸ் செய்கிறேன். ஆனால், அவரை அடுத்து பா.விஜய், விவேக் போன்ற பாடல் ஆசிரியர்களுடனும் நிறைய ஹிட்ஸ் அமைந்திருக்கிறது.

🎼ஒரு நாள், விஜயுடன் பணியாற்றும் ஜகதீஷ் ஒரு புகைப்படத்தை அனுப்பினார். அதில், விஜய் மகன் “யுவனிசம்’ என்ற டி-சர்ட் அணிந்திருந்தார். அதை பார்த்ததும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதை நான் வெளியில் பகிரவில்லை. ஏனென்றால், மிகவும் பர்சனலாக உணர்ந்தேன்! பின் ஒரு நாள் எனக்கு தெரியவந்தது, அந்த புகைப்படத்தை அனுப்ப சொன்னதே விஜய் சார்தான் என்று!

🎼எனக்கு உண்மையில் இந்தி தெரியாது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த டி-சர்ட்டை அணியவில்லை