விண்டோஸ் கணனியில் கூகுள் வாய்ஸ் டைப்பிங் பயன்படுத்த ஆரம்பிச்சாச்சா?

சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னரே ‘உங்கள் மொபைலுடன் பேசுங்கள்; அதுவும், தமிழில் பேசுங்கள்’ என்றது, கூகுள். இந்த கூகுள், அதையொட்டி, 30 புதிய மொழிகளில் பேச்சு உணர் மென்பொருளை அறிமுகப்படுத்தி இருந்தது. அதில், தமிழும் ஒன்று. அது வந்த பிறகு, கூகுளில் தேடுவது, தட்டச்சு செய்வது போன்ற எல்லாவற்றுக்கும், இனி நீங்கள் இரு விரல்களை பயன்படுத்த வேண்டியது குறைந்து விட்டது. தமிழிலேயே பேசினால், ஜிபோர்டின், ‘வாய்ஸ் டைப்பிங்’ மென்பொருள் புரிந்து கொண்டு தட்டச்சு செய்யும். தட்டச்சு செய்வதை விட, மூன்று மடங்கு வேகமாக பேச முடியும் என்பதால்,இனி, பத்தி பத்தியாக குறுஞ்செய்திகளை, வினாடிக்கு வினாடி அனுப்புவது அதிகரிக்கிம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வளவாக பலர் அப்டேட் ஆக வில்லை. ஆனாலும் இன்று இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பதை பேசியே தமிழில் டைப் செய்தோம் என்றும் சிலபலர் தெரிவித்தார்கள். அது எப்படி சாத்தியம் என்பதை ஒரு சில நுணுக்கங்களை தெரிந்து கொண்டு பயன்படுத்தினாலே போதும்.

முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது நாம் நேரடியாக கூகுள் வாய்ஸ் டைப்பிங்கை கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியாது. அதனால் நீங்கள் செய்ய வேண்டியது முதலில் கம்ப்யூட்டரில் ஒரு ரிமோட் சர்வரையும் மொபைலில் அதற்குண்டான கிளையன்ட்டையும் பயன்படுத்தினால் மொபைலில் இருந்து பேசிக் கொண்டே நாம் கம்ப்யூட்டரில் டைப் செய்து கொள்ளலாம். இது எப்படி சாத்தியம் என்பதை நீங்களே கண்டு உணரலாம்

உங்களுக்குத் தேவையானது ஒரு கம்ப்யூட்டர் ஒரு மொபைல் போன் இந்த இரண்டுமே ஒரே வை.ஃபை இணைப்பில் இணைந்து இருக்க வேண்டும். இதற்கு சர்வர் சாப்ட்வேர் ஒன்றை கம்ப்யூட்டரில் நிறுவ வேண்டும் அதேபோல் ஒரு ஆப்பை உங்கள் மொபைல் போனில் நிறுவ வேண்டும் யூனிஃபைட் ரிமோட் எனும் ப்ரோக்ராமை நீங்கள் இரண்டு இடங்களிலும் பயன்படுத்த வேண்டும். இந்த யூனிஃபைட் ரிமோட் இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details…

https://www.unifiedremote.com/download

இதைப் பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டரில் முதலில் புரோகிராமை நிறுவிக் கொள்ளுங்கள் பிறகு கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று அதே பெயர் கொண்ட ஆப்பையும் அங்கேயும் ஒன்று நிறுவிக்கொள்ளுங்கள் இது இரண்டும் ஒரே வைஃபை இணைப்பு இருந்தால் இரண்டும் ஒன்றோடு ஒன்று சுலபமாக இணைந்து விடும்.

அதன் பிறகு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் மொபைலில் அந்த ஆப்பை திறந்து அதிலுள்ள கீபோர்ட் என்பதை தொட்டு அதன் உள்ளே உள்ள கூகுள் வாய்ஸ் டைப்பிங் எனும் பொத்தானை அழுத்தி பயன்படுத்தி கம்ப்யூட்டரில் உள்ள எந்த புரோகிராமிலும் நீங்கள் தமிழில் பேசிக்கொண்டே டைப் செய்யலாம். இந்த பதிவு முழுக்க முழுக்க கூகுள் வாய்ஸ் டைப்பிங் பயன்படுத்திய தமிழில் எழுதப்பட்டுள்ளது.

இருந்தாலும், இப்போதைக்கு, அது பலரது தமிழ் உச்சரிப்புகளை எழுத்தாக மாற்றுவதில், சில தவறுகள் இருக்கும். என்றாலும், லட்சக்கணக்கான தமிழர்கள், குரல் தட்டச்சை பயன்படுத்தும் போது, அதன் துல்லியம் வெகுவாக அதிகரிக்கும் என்று நம்பலாம்.