உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் பொருளாதார, மற்றும் சில காரணங்களால நேரில் செல்ல முடியாது. அதனால் அதை செய்ய முடியாமால் போய்விடுகிறது. அதற்கு கால காலமாக நம் நினைவில் ஒரு நீங்கா நிராசையாக நின்று விடுவதுண்டு. அதற்காக RSS ன் “அஸ்தி விசர்ஜன்” அமைப்பும், Indian SPEED POST ம் இணைந்து அந்த சேவையை செய்து வருவது பலருக்கு தெரிவதில்லை. ஆம், அஸ்தி சாம்பலை இப்போது ஸ்பீட் போஸ்ட் வழியாக அனுப்பி, புனித கங்கையில் கரைக்கலாம், அவர்கள் செய்யும் சடங்குகளை நேரலையில் பார்க்கலாம்.
ஆம்.. வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயாவில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்திற்குப் பிந்தைய சடங்குகளைச் செய்ய அனுமதிக்கும் சமூக-மத அமைப்பான ‘ஓம் திவ்ய தர்ஷன்”, உடன் இணைந்து புதிய முயற்சியை அஞ்சல் துறை அறிவித்துள்ளது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது
வசதியை எப்படிப் பெறுவது?
1) முதலில் http://www.omdivyadarshan.org/ இல் உள்ள ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தாவின் போர்ட்டலில் ஒருவர் இறந்தவர் பற்றிய விபரத்தை Google Form ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்ய கீழே இருக்கும் லிங்க்:
https://docs.google.com/…/1FAIpQLSfN3R…/viewform
2) பதிவு செய்து அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய பின்புதான் சாம்பல் அனுப்ப வேண்டும். +91 83696 66626
3) பதிவுசெய்த பிறகு, சாம்பல் பொட்டலம் வாரணாசி, பிரயாக்ராஜ், ஹரித்வார் மற்றும் கயா/ஆகிய இடங்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்படலாம். அதில் ‘ஓம் திவ்ய தரிசனம்’ என்று தடித்த எழுத்துக்களில் எழுத வேண்டும். ஸ்பீட் போஸ்ட்டை முன்பதிவு செய்த பிறகு, அனுப்புநர் போர்ட்டலில் முன்பதிவு விவரங்களுடன் அந்த அஸ்தியை அனுப்பிய தபால் பற்றிய தகவலை புதுப்பிக்க வேண்டும்
4) இதற்குப் பிறகு, “ஓம் திவ்ய தர்ஷன் சன்ஸ்தா”, சாம்பல் மூழ்குதல் மற்றும் பிற சடங்குகளை கவனித்துக் கொள்ளும். அந்த இறுதி சடங்குகளை இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் இங்கிருந்தே இணைய ஒளிபரப்பு மூலம் பார்க்க முடியும்.
பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…
பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…
நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…
இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…
இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…
This website uses cookies.