ஹாஸ்டல் – விமர்சனம்!

ஹாஸ்டல் – விமர்சனம்!

ஹீரோவாகப்பட்ட அசோக் செல்வன் ஹாஸ்டல் ஒன்றில் தங்கி காலேஜில் படிக்கிறார். அந்த ஹாஸ்டலின் இன்சார்ஜ் நாசர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான காமெடியன். வாட்ச்மேன் ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ். மாணவர்கள் மட்டுமே தங்கும் அந்த ஹாஸ்டலில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு நாள் இரவு மட்டும் தங்குவதற்கு உதவி செய்தால் வேண்டுமளவு பணம் தருகிறேன் என்று சொல்லி அசோக் செல்வனிடம் சொல்கிறார் ப்ரியா நாயகிபவானி சங்கர். பணத் தேவையுடன் விழி பிதுங்கி நிற்கும் அசோக் செல்வனும் அதற்கு ஒப்புக் கொண்டு ப்ரியா பவானி சங்கரை ஹாஸ்டலுக்குள் அழைத்துச் செல்கிறார். பொழுது விடிவதற்குள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்ற திட்டமிடலுடன் உறங்குகிறார் ப்ரியா. நிம்மதியாக தூங்கி விட்ட காரணத்தால் ப்ரியாவால் நினைத்தப்படி விடுதியிலிருந்து வெளியேற முடியவில்லை. இதற்கிடையே விடுதிக்குள் பெண் இருக்கிறார் என்று சொல்லும் ராம்தாஸின் பேச்சை நம்ப மறுக்கும் நாசர் விடுதியை சோதனை செய்ய முடிவு செய்கிறார். அதிலிருந்து ப்ரியாவை தப்பிக்க வைக்க அசோக் செல்வனும் அவருடைய நண்பர்களும் முயற்சி செய்கிறார்கள். மாணவர்களின் முயற்சிக்குப் பலன் கிடைத்ததா, இல்லையா? என்பதை நகைச்சுவையோடு சொல்வதுதான் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், இம்முறை கல்லூரி மாணவன் என்பதால் உடலை மெலிய வைத்தெல்லாம் வந்தாலும் நடிப்பில் பெரிய முன்னேற்றம் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், ஸ்கோர் செய்கிறார்.

ஹாஸ்டல் வார்டனாக வரும் நாசர் munnaree sonnathu pool ஸ்ட்ரிக்டாக இருந்து நகைச்சுவை செய்ய முயற்சி செய்துள்ளார். இவருக்கு உதவியாளராக நடித்திருக்கும் முனீஸ்காந்த் சில காட்சிகளில் சொதப்பினாலும் பல காட்சிகளில் நன்றாகவே கிச்சு கிச்சு மூட்டி உள்ளார்.  ஹீரோவின்(குடிகார) நண்பர்களாக வரும் சதீஷ், கேபிஒய் யோகி, கிரிஷ் குமார் ஆகியோர் கடமைக்கு வந்து சென்றுள்ளனர். வழக்கமான காமெடி பேய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறந்தாங்கி நிஷா சில இடங்களில் சிரிக்க வைக்கவும் பல இடங்களில் சோதிக்கவும் செய்துள்ளார்.

படத்துக்கு பெரிய பலம், ரவிமரியா. வழக்கமான ‘சவுண்ட்’ஆன நடிப்பு என்றாலும் வழக்கம்போலவே ரசிக்க வைக்கிறார். அதுவும் பேயிடம் அடிபடும் காட்சியில் அசத்தி இருக்கிறார். (மனிதருக்கு எங்கெங்கு காயமோ பாவம்!)

இந்தப் படத்தில் பின்னணி இசையைக் கூட ரீ மேக் செய்திருக்கிறார், ‘போபோ’ சசி. அதுவும் ரசிக்க வைக்கிறது.

காமெடி என்று நம்பி படம் பார்க்க வரும் ரசிகர்களை மகிழ வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் டபுள் மீனிங் டயலாக்-குகளை கலெக்ட் செய்து கோர்த்து இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் .

மொத்தத்தில் டைம் பாஸ் மூவி லிஸ்டில் எக்ஸ்ட்ரா சேர்ந்துள்ளது இந்த ஹாஸ்டல்

மார்க் 2.75/5 

Related Posts

error: Content is protected !!