December 2, 2022

நாம் வெற்றியின் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளோம் = மோடி கடிதாசு

“இந்தியாவில் கொரோனா பரவும்போது, உலகிற்கு ஒரு பிரச்சினையாக இந்தியா மாறும் என்று பலரும் அச்சப்பட்டார்கள். ஆனால் இப்போது, நம்பிக்கை மற்றும் தாங்கிக் கொள்ளும் தன்மை ஆகியவற்றின் காரணமாக, உலகம் நம்மைக் காணும் பார்வையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். உலகின் வல்லமையான, வளமை மிகுந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் கூட்டு பலத்திற்கும், செயல் திறனுக்கும் இணை ஏதும் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர் கள். இருந்தபோதிலும், இப்போது நாம் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் பேரழிவாக மாறிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதில் நாம் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக தலைமையிலான பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்து இன்று சனிக் கிழமையுடன் (மே 30) ஓராண்டு நிறைவடைந்து இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அனைத்து மொழிகளிலும் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம்

2014 முதல் 2019 வரையிலான காலத்தில் இந்தியாவின் பிரமிப்பான தோற்றம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஏழைகளின் கண்ணியம் மேம்பட்டிருக்கிறது. நிதி பங்கெடுப்பு, இலவச எரிவாயு மற்றும் மின் இணைப்புகள், முழுமையான கழிப்பறை வசதி, `அனைவருக்கும் வீடு’ திட்டத்தை நோக்கிய பயணம் என சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் மூலம் தன் வல்லமையை இந்தியா நிரூபித்துள்ளது. அதே சமயத்தில், ராணுவத்தில் ஒரே அந்தஸ்திலான பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம், நாடு முழுக்க ஒரே மாதிரியான வரித் திட்டம் – – ஜி.எஸ்.டி., விவசாயிகளுக்கு அதிக அளவிலான குறைந்தபட்சக் கொள்முதல் விலை போன்ற பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் சாசனத்தின் 370–வது பிரிவு தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வை பலப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் ஒரு மனதாக அளித்த ராமர் கோவில் தீர்ப்பு, பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. பழமை எண்ணம் கொண்ட முத்தலாக் நடைமுறை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டது. குடிமக்கள் சட்டத்தில் செய்துள்ள திருத்தம், இந்தியாவின் பரிவு மற்றும் பங்கேற்பு நிலை அளிக்கும் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆனால் தேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு உந்துதல் தரக்கூடிய இன்னும் பல முடிவுகளும் இருக்கின்றன.

பதவி நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உருவாக்கப்பட்டதன் மூலம், ராணுவத்தின் பிரிவுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மிஷன் கங்கன்யானுக்கு ஆயத்தப் பணிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வது நமது உயர் முன்னுரிமையாக இருக்கிறது.

பிரதமரின் கிசான் சம்மான் நிதியில் அனைத்து விவசாயிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஓராண்டு காலத்திற்குள் 9 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் ரூ.72 ஆயிரம் கோடி செலுத்தப் பட்டுள்ளது.

ஜல் ஜீவன் மிஷன் மூலமாக, கிராமப்புறங்களில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

50 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, இலவசமாகத் தடுப்பூசி போடுவதற்கான பெரிய அளவிலான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், சிறிய கடை வைத்திருப்பவர்கள், அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் வங்கிக்கடன்கள் பெறுவதுடன், அவர்களுக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறையை பலப்படுத்த வேறு பல முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. இவை நீலப் பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிப்பவையாக இருக்கும்.

அதேபோல வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு காண்பதற்காக வியாபாரி கல்யாண் வாரியம் என்ற அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுடன் இணைந்துள்ள 7 கோடி பெண்களுக்கு அதிக அளவிலான தொகை கடனாக அளிக்கப்படுகிறது. ஜாமீன் எதுவும் இல்லாமல் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து சமீபத்தில் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது.

மலைவாழ் மக்களின் பிள்ளைகளின் கல்வியை மனதில் கொண்டு, 400–க்கும் மேற்பட்ட புதிய ஏகலைவா மாடல் இருப்பிடப் பள்ளிகளை உருவாக்கும் பணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். முதன்முறையாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவும்போது, உலகிற்கு ஒரு பிரச்சினையாக இந்தியா மாறும் என்று பலரும் அச்சப்பட்டார்கள். ஆனால் இப்போது, நம்பிக்கை மற்றும் தாங்கிக் கொள்ளும் தன்மை ஆகியவற்றின் காரணமாக, உலகம் நம்மைக் காணும் பார்வையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். உலகின் வல்லமையான, வளமை மிகுந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் கூட்டு பலத்திற்கும், செயல் திறனுக்கும் இணை ஏதும் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர் கள். இருந்தபோதிலும், இப்போது நாம் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் பேரழிவாக மாறி விடாமல் இருப்பதை உறுதி செய்வதில் நாம் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

எனவே, அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் ஒவ்வொரு இந்தியரும் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம். நாம் இதுவரையில் பொறுமையைக் கடைபிடித்து வருகிறோம், அது அப்படியே தொடர வேண்டும். இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்கும், மற்ற நாடுகளைவிட நல்ல நிலையில் இருப்பதற்கும் இதுதான் காரணம். இது நீண்ட போராட்டம். ஆனால், நாம் வெற்றியின் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளோம். வெற்றி என்பது தான் நமது கூட்டு தீர்மானமாக இருக்கிறது.

பொருளாதார விஷயத்தைப் பொருத்த வரையில், 130 கோடி இந்தியர்களும் தங்களுடைய பலத்தின் மூலம், உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதுடன், உத்வேகம் அளிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

தற்சார்பு இந்தியா திட்டத்துக்காக சமீபத்தில் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களின் தொகுப்பு, இந்த இலக்கை நோக்கிய பயணத்தின் முக்கியமான நடவடிக்கை ஆகும்.

இந்த முன்முயற்சி ஒவ்வொரு இந்தியருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் புதிய காலக்கட்டத்தை உருவாக்கும். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்த இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் புதிய வாய்ப்புகளைத் தரும் காலகட்டமாக இருக்கும்.

இறக்குமதியைக் குறைக்க…

வியர்வை, கடின உழைப்பு, நமது தொழிலாளர்களின் திறமையுடன் கூடிய இந்திய மண், இறக்குமதிகளை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் வகையிலான உற்பத்திகளை அதிகரிக்கச் செய்து, தற்சார்பை நோக்கி பயணம் செய்வதாக இருக்கும். 130 கோடி மக்களின் தற்போதைய நிலையும், எதிர்காலமும் எதிர்மறை விஷயங்களால் ஒருபோதும் பாதிக்கப்பட்டு விடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நமது தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தை நாமே முடிவு செய்வோம்.

முன்னேற்றத்தின் பாதையில் நாம் முன்னேறிச் செல்வோம், வெற்றி நமதாக இருக்கும்.

இவ்வாறு மோடி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

என பிரதமர் நரேந்திர மோடி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.