Exclusive

அன்பே அறிவு என்பது தான் அன்பறிவு ஆனது!

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 2022 ஆண்டின் முதல் வெளியீடான “அன்பறிவு” திரைப்படம் உலகளாவிய வெளியீடாக ஜனவரி 7, 2022 முதல் Disney Plus Hotstar ப்ரத்யேகமாக வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி இன்று இயக்குநர் அஷ்வின் ராம், நடிகர் ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்.. இயக்குநர் அஷ்வின் ராம் பேசியது…

இந்தபடம் என் முதல் படம் முழுக்க முழுக்க குடும்படமாக அவர்கள் கொண்டாடி பார்க்கும் படமாக இப்படத்தை எடுத்துள்ளோம். நான் மியூசிக் ஆல்பம் செய்த போது என்னுடன் இருந்த குழு தான் இந்தப்படத்திலும் பணியாற்றியுள்ளார்கள். படத்தில் ஒரு மிகப்பெரிய செய்தி இருக்கிறது அதை குறிப்பிடும் விதமாக தான், இந்த டைட்டிலை வைத்தோம். அன்பே அறிவு என்பது தான் அன்பறிவு என மாறியது. இது ஏற்கனவே வந்த கதை என எல்லோரும் சொல்வதை நாங்களும் கேட்டோம். இது அது போல் வழக்கமான கதை தான் ஆனால் அதைதாண்டி பல ஆச்சர்யங்களும் இப்படத்தில் இருக்கும். தியேட்டரில் படம் வரவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கிறது ஆனால் படம் எல்லோரையும் போய் சேர வேண்டும் எனும்போது ஓடிடி தான் சரியான வாய்ப்பு என தோன்றியது.

நடிகர் ஹிப் ஹாப் ஆதி பேசியது….

இந்தப்படத்தில் காமெடியை தாண்டி பொழுதுபோக்கு அம்சங்கள் குடும்ப பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு இப்படம் இருக்கும். முதன் முறையாக இது எனக்கு பெரிய பட்ஜெட் படம். நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். நெப்போலியன் சார், விதார்த் சார் முக்கிய பாத்திரங்கள் செய்துள்ளார்கள். ஒரு கிளாசிக் கதை அதை மீண்டும் குடும்பங்களோடு கொண்டாடும் படமாக உருவாக்கியுள்ளோம். ஒரு குடும்ப படத்தை மியூசிக்கலாக உருவாக்க நினைத்து தான் இயக்குநர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் மியூசிக்காக நிறைய உழைத்திருக்கிறோம். அஷ்வின் என்னைப்போலவே மியூசிக் இயக்குநராக இருந்து வந்தவர். 13 வருடங்கள் இந்த துறையில் இருக்கிறார். மிக அனுபவம் வாய்ந்த ஒரு இயக்குநர் போல் இப்படத்தை இயக்கியுள்ளார். அவருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். எம்ஜிஆர் படங்கள் முதல் ஏகப்பட்ட க்ளாசிக் படங்கள் இந்த கதையில் வந்திருக்கிறது. அதையே தான் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சித்திருக்கிறோம். கமர்ஷியலை தாண்டி கிளாசிக்கான படைப்பாக இப்படம் இருக்கும். வேகமாக ஓடிட்டு இருக்கிற உலகத்துல, அறிவோட இருக்குறதுனா அன்போட இருக்கிறது தான் என்பதை தான் இப்படம் சொல்கிறது. விதார்த் ஒரு அட்டகாசமான ரோல் செய்திருக்கிறார். வழக்கமான சினிமாவில் காட்சிகள் ஒவ்வொன்றையும் வித்தியாசமாக செய்திருக்கிறோம். இரட்டை வேடம் செய்தது சவாலாக இருந்தது. நமக்கான கனவுகள் சாத்தியமாகும்போது கஷ்டப்படவும் தயாராக இருக்க வேண்டும். அந்த வகையில் திரைத்துறையில் இருப்பதே எனது கனவு தான் அதில் இரட்டை வேடம் நடிப்பது வரம் தான். 5 படங்களுக்கு செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது.

‘அன்பறிவு’ திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தை G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர். இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி முதன்மை வேடத்தில் நடிக்க, ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களில் மாதேஷ் மாணிக்கம் (ஒளிப்பதிவு), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), எஸ்எஸ் மூர்த்தி (கலை), பிரதீப் தினேஷ் (ஸ்டன்ட்), பொன் பார்த்திபன் (உரையாடல்கள்), பூர்ணிமா ராமசாமி (ஆடை வடிவமைப்பாளர்), மற்றும் ஷெரீப். (நடன இயக்குனர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

aanthai

Recent Posts

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் மோடி மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு…!

பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு…

1 hour ago

உணவு விநியோகம் பெற உதவும் வாட்ஸ் ஆப் எண் 8750001323 – இந்திய ரயில்வே அறிமுகம்!

நம் நாட்டின் ரயில் பயணிகள் வாட்ஸ்-ஆப் மூலம் உணவை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப் படுத்தியுள்ளது.…

4 hours ago

சர்ச்சைகளுக்கிடையே விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்பு..!

பாஜக உறுப்பினர் அட்டை எல்லாம் வைத்திருந்த விக்டோரியா கெளரிக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை…

8 hours ago

இணையில்லாத இறையன்பு! காகிதப் படகில் சாகசப் பயணம்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. “உங்களுக்கு எதிர்காலத்தில் யார் மாதிரி ஆக ஆசை?” என்று ஐஏஎஸ் அகாடமி ஒன்றில்…

14 hours ago

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு!

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.…

1 day ago

சிம்ஹா நடித்த ‘வசந்த முல்லை’ படத்தின் டிரைலர் வெளியீடு!

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த…

1 day ago

This website uses cookies.