திருநங்கை திருமணத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் கோயில் நிர்வாகம்!

திருநங்கை திருமணத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் கோயில் நிர்வாகம்!

உப்பு நகரம் என்றும் ஸ்டெரிலைட் சிட்டி அப்படீனும் அடையாளபடுத்தப்படும் தூத்துக்குடியிலே பாலமுத்து நகரைச் சேர்ந்த பாலசுப்ரமணியம், சுப்புலட்சுமி தம்பதியோட மவன் அருண்குமார். சத்ர்ன் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வாரார். அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிராமன் வள்ளி தம்பதிகளின் மகள் ஸ்ரீஜா. இவர் திருநங்கை ஆவார். வ.உ.சி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த ஸ்ரீஜாவுக்கும், அருண்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி திருமணமும் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர். இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் பின்னர் இருவரின் காதலை புரிந்துக்கொண்டு திருமணம் செய்து வைக்க சம்மதிச்சுட்டாங்க.

ரெண்டு ஃபேமிலி சம்மதத்தோட நாள், நட்சத்திரம் குறித்து, பத்திரிகையெல்லாம் அடித்து தூத்துக்குடியில் உள்ள சிவன் கோவிலில் இன்று காலை 10. 45 மணிக்கு திருமணம் செய்ய இடமும் குறித்து சொந்த பந்தங்களுக்கு பத்திரிகையும் குடுத்தாங்க. திட்டமிட்டப்படி உற்றார் உறவினர், ஸ்ரீஜாவின் தோழிகளான திருநங்கைகள் புடைசூழ பட்டுவேட்டி பட்டுச்சட்டையுடன் மணமகனும், பட்டுபுடவையில் மணமகளும் இன்னிக்கு மணக்கோலத்தில் கோவிலுக்கு வந்தனர்.

அப்போதான் மணபொண்ணு திருநங்கை என்கிற தகவல் கோவில் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. உடனே அஸ்ஸூக்கு புஸ்ஸூக்கு இந்த மேரேஜை ரிஜிஸ்டர் செய்ய முடியாது என மறுத்துப்புட்டாய்ங்க்.

உடனே ஜோடியோட பெற்றோர்கள் நாங்களே எங்கள் பிள்ளைகளின் உணர்வை மதித்து சம்மதித்து உள்ளோம். நாடு எவ்வளவோ மாறிவருகிறது. திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக மதிக்கும் நிலை உருவாகியுள்ளது. கல்வி, கவுரமான வேலை என்று திருநங்கைகள் மதிக்கப்படும் நிலையில் இப்படி கோவில் நிர்வாகம் மறுக்கலாமா, எங்கள் வீட்டு நல்ல காரியம் நடக்கும் கோவில் இதுதான் நீங்களே மறுத்தால் எப்படி அப்ப்டீன்னு பேரண்ட் தரப்பில் கோரிக்கை வைத்தனர்.

அதை ஒத்துக்கலை கோயில் அட்மின். அதுனாலே ஒரு கட்டத்தில் இந்த பிரச்சினை வாக்குவாத மாகி போலீஸாருக்கு தகவல் சென்று போலீஸார் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வந்தனர். இந்த மணமக்கள் நிலையை புரிந்துக்கொண்டனர்.

அவிய்ங்ககிட்டே இப்போ திருமணம் செய்துக் கொள்ளுங்கள். அப்பாலே கோர்ட்டுக்கு போய் உங்கள் திருமணத்தை முறைப்படி பதிவு செய்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி சமாதானம் செஞ்சு அந்த போலீஸாரே மேரேஜை நடத்தி வைச்சய்ங்க

error: Content is protected !!