January 28, 2023

காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானில் நடத்திய “சிந்தனை அமர்வு கூட்டம்” மாநாடு ஹைலைட்ஸ்!

காங்கிரஸ் கட்சியின் “சிந்தனை அமர்வு கூட்டம்” மாநாடு உதய்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.இக் கூட்டத்தில் We will overcome என்று மூன்று கூறி தனது உரையை முடித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

காங்கிரஸ் கட்சி சார்பில் உதய்பூரில் கடந்த 13ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு ’நவ் சங்கல்ப் சிந்தன் சிவிர்’ எனப்படும் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அடுத்த ஓராண்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் மேற்கொள்கிறார், அதில் பெரும்பகுதி பாதயாத்திரையாக இருக்கும் என ஏஎன்ஐ தகவல் வெளியிட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நாடு முழுவதும் ராகுல்காந்தி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அக்கட்சியினருடைய ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போதைய தகவல் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. யாத்திரை மூலம் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்த வரலாறுகள் இந்திய அரசியலில் உள்ளன. ஆகவே, ராகுலின் யாத்திரையும் காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் என நம்புகிறார்கள் காங்கிரஸார்.

இச்சூழலில் கடந்த 2 நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் முன்மொழிந்த தீர்மானங்கள் குறித்து விவாதித்து, ஒப்புதல் அளிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி குழு இன்று கூடியது. அப்போது, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவே முக்கியமான நோக்கம் என்பதால், கட்சியில் வயது வரம்பின்றி அனைவருக்கும் பொறுப்பு வழங்கி, ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட காலம் நிர்ணயம் செய்ய வேண்டும் என உயர்மட்ட குழு பரிந்துரைத்தது. இது தவிர குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்ற விதிமுறைகளையும் அமல்படுத்த குழு காரிய கமிட்டியிடம் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக நாட்டின் பொருளாதாரம், விவசாயம், இளைஞர் நலன், சமூக நீதி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் உருவாக்கப்பட்ட குழுக்கள் தயாரித்த அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் இன்று காலை ஒப்படைத்தனர்.

மேலும் மூன்றாவது மற்றும் கடைசி நாளான இன்று, கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வர வேண்டும் என வலியுறுத்திய நிலையில், சில தலைவர்கள் பிரியங்கா காந்தியை தலைவராக்கலாம் என்ற யோசனையை முன் வைத்ததாகத் தெரிகிறது.

இந்த யோசனைக்கு மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் ராகுலை மீண்டும் தலைவராக தேர்வு செய்யலாம் என்று பேசியதாகவும் தெரிகிறது. ஆனால், தலைவர் பதவியை ஏற்க ராகுல் தயக்கம் காட்டுவதை சுட்டிக்காட்டி பிரியங்காவிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதே சமயம் இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியது:

தற்பாது இரண்டு வகையான இந்தியா உள்ளது. ஒன்று கருத்துகளை கூறும் இந்தியா, மற்றொன்று அதனை எதிர்க்கும் இந்தியா. மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு உணரவைக்க வேண்டியது நமது பொறுப்பு. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இதை செய்ய முடியும்.

நமது நாடு எந்த ஒரு தனி நபருக்கும், எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானது அல்ல. இங்கு பகிரும் இந்தியா, மற்றொன்று .வன்முறையில் ஈடுபட தயாராகும் இந்தியா. காங்கிரஸால்தான் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது மக்களுக்குத் தெரியும். வெகுஜன மக்களுடனான நமது தொடர்பு அறுந்து விட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்..

முடிவாக சோனியாவின் ‘’வீ வி ஓவர்கம்’ என்ற கோஷத்துடன் கலைந்தனர்