December 1, 2021

சென்னை எக்மோரின் பிடிப்பட்ட நாய்கறியான ஆட்டிறைச்சி சர்ச்சை! – ஐகோர்ட் கேள்வி!

கடந்த வாரம் நான் வெஜ் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாய் கறி சர்ச்சை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அண்மையில் தமிழ்நாடுஉணவுபாதுகாப்பு அதிகாரிகள். பிடிபட்ட இறைச்சியை சரியான சோதனைக்கு உட்படுத்தபடாமல் இது நாய்கறி என்று தவறான செய்திகள் பரப்பியது தவறு அவ்வாறு அவர்கள் செய்த தவறினால்  அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பிடிபட்ட இறைச்சியின் உண்மை தன்மை அறியாமல் பொய் பரப்பியதால் ஓட்டல் உணவகம், ஆட்டு இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரி , ஆடுவளர்க்கும் விவசாயிகள் ஆகியோர் பீதியில் உள்ளனர் என்றும் எல்லா மாநிலங்களிலும்ஆடுகள்வேறுபட்டு இருக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் இங்கு அதிகாரிகளாக இருக்கிறார்கள்.

 

உண்மைதன்மைதெரிந்தபின்பு இது ஆட்டுகறி தான் என்றுதெரிந்த பின்பு  பீதியை  உருவாக்கிய வர்களுக்கு என்னதண்டனையை இந்தஅரசாங்கம் வழங்க போகிறது என்றெல்லாம் குரல் எழும்பி வரும் நிலையில் சென்னை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி அழிக்கப்பட்டது தொடர்பாக, சென்னை மாநகராட்சி அறிக்கை அளிக்கச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதாவது கடந்த 17ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் 2,100 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உடனடியாக இது நாய் கறி என்றும் பின்னர் கெட்டு போன ஆட்டிறைச்சி என்றும் அடுத்தடுத்து செய்திகள் வெளியானது .

இந்நிலையில் இந்த இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தர விடக் கோரி இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை உணவுத் துறை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், ரயில்வே காவல் துறை பதிவு செய்த வழக்கில் விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை எனக் கூறப் பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சியைக் கொண்டு வருவதற்கான விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, “பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் ஆய்வுக்குக் கால்நடை மருத்துவ பல்கலை கழகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வு செய்ததில் ஆட்டு இறைச்சி என்று தெரியவந்தது. இருப்பினும் அந்த இறைச்சி சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அதை மாநகராட்சி அழித்துவிட்டது” என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள் எந்த விதியின் கீழ் இறைச்சிகள் அழிக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கில், சென்னை மாநகராட்சியையும் பிரதிவாதியாக சேர்த்துள்ள, நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.