அழகுக் கலை (என்ற) பியூட்டி பார்லருக்கான சட்டம் என்னாச்சு? ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி!

அழகுக் கலை (என்ற) பியூட்டி பார்லருக்கான சட்டம் என்னாச்சு? ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி!

அழகுக் கலை என்பது ரொம்ப சுலபமான விஷயமில்லை. அதுவும் ஓர் அறிவியல். முறையாக அழகுக் கலையைக் கற்பதற்குக் கொஞ்சம் இயற்பியல், கொஞ்சம் வேதியியல், கொஞ்சம் உயிரியல் தெரிந்திருக்க வேண்டும். பெண்களுக்கு வரும் முகப்பருவையே எடுத்துக் கொள்வோம். அது ஏன் வருகிறது என்பது பற்றிப் படிக்கும்போது காற்றில் இருக்கும் பாக்டீரியா, அவற்றின் இனப்பெருக்கம் பற்றிப் படிக்க நேர்கிறது. இது உயிரியல். சூரிய ஒளியையும் பிரிசத்தையும் பற்றிப் படிக்கும்போது இயற்பியல். ஓசோன் மற்றும் அரோமா எண்ணெய்களைப் பற்றிப் படிக்கும்போது வேதியியல். எனவே அடிப்படைக் கல்வியாக 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள் அழகுக் கலையைப் பயிலலாம்.

beauty par sep 14

அத்துடன் அழகு நிலையம் தொடங்குவதற்கு முன் அழகு சிகிச்சை பற்றிய அறிவியல் சார்ந்த முறையில் முழுமையான அறிவு பெற்றிருக்க வேண்டும். சருமங்களின் பல வகைகளையும் (உதாரணமாக சாதாராணமானது, வறண்டது, எண்ணைய்ப் பசையுள்ளது போலப் பல வகை) அவற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும்.மேலும் தலைமுடியில் ஏற்படும் பிரச்சினைகளான தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும். அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் க்ரீம், சொல்யூஷன், பேக் போன்றவற்றைப் பற்றிய அறிவு தேவை. வாடிக்கையாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய வகையில் அறிவியல் ரீதியில் அழகு சிகிச்சை பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் டீக் கடை ஆரம்பிப்பது போல் பியூட்டி பார்லர் தொடங்கி விடுவதும் ஏதோ காரணத்தால் மூடி விடுவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மருத்துவ மையம் (கிளினிக்), அழகு நிலையங்கள் கவனக்குறைவாக செயல்படுவது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீதான நடவடிக்கை என்ன என்பது உள்ளிட்ட 10 கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், செப்டம்பர் 19-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு ஹைகோர்ட்உத்தரவிட்டுள்ளது.

அதாவது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள -ARHT GLOBAL HAIR SERVICES PRIVATE LIMITED- என்ற மையத்தில் மருத்துவர் சந்தோஷ்குமார்(22) மே 15-ஆம் தேதி முடி மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். சிகிச்சை முடிந்த அடுத்த இரண்டு நாள்களில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அரசு அதிகாரிகள், அந்த சிகிச்சை மையத்தை மூடி -சீல்- வைத்தனர்.

இதையடுத்து, இந்த -சீல்- யை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட சிகிச்சை மையத்தின் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில், நாடு முழுவதும் 3 ஆயிரம் பேரும், சென்னையில் மட்டும் 300 பேர் சிகிச்சை பெற்று இருக்கின்றனர். சந்தோஷ்குமார் தவிர்த்து, வேறு யாருக்கும் இது போன்று ஏற்படவில்லை. ஆனால், அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. மேலும் இது குறித்து எங்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்காமல் அரசு அதிகாரிகள் மையத்துக்கு வைத்துள்ள -சீல்- யை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இருதரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு இதுதான்;

தமிழ்நாடு தனியார் மருத்துவ மையங்கள்ள் ஒழுங்குமுறை சட்டம், 1997-இல் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் கீழ் விதிகள் வகுக்கப்படாததால் இது நாள் வரை அமலுக்கு வராமல் உள்ளது. இதுபோன்று மத்திய அரசின் சட்டத்தை ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்கள் மட்டுமே ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. மேலும் 14 பேர் கொண்ட குழுவை அமைத்து ஒழுங்குப்படுத்த வேண்டும் என சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதன் காரணமாக, பியூட்டி பார்லர், அழகு நிலையம், மருத்துவ சிகிச்சை மையம், முடிமாற்று சிகிச்சை மையம் என்ற பெயரில் பல கிளினிக்-கள் உருவாகி வருகின்றன். அவற்றையும் ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் அல்லது ஏற்கெனவே உள்ள 1997-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்.

எனவே, இந்த வழக்கில் மத்திய உள்துறை, சட்டத்துறை, தமிழக சட்டத்துறை, தமிழக சுகாதார துறை ஆகியோரை எதிர் மனுதாரர்களாக இணைக்கிறேன். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதார துறை, சட்டத்துறை செயலாளர் ஆகியோர் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

மேலும் தனியார் கிளினிக்கல் நிறுவனங்கள் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்தும் வகையில் விதிகளை வகுக்காதது ஏன், மருத்துவ மையம், அழகு நிலையங்கள் கவனக்குறைவாக செயபடுவது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன, அந்த புகார்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 10 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செப்டம்பர் 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்.

Related Posts

error: Content is protected !!