August 11, 2022

தமிழ் சினிமாவிற்கே மிக சிறந்ததொரு பெருமையை வழங்க வரும் அயலான்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்றியமையாத படமாக, மிகப்பெரும் பட்ஜெட் டில் “இன்று நேற்று நாளை” இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் 24AM நிறுவனம் சார்பில் RD ராஜா தயாரிக்கும் படத்திற்க்கு “அயலான்”  எனப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதற்கு பொருள பேச்சு வழக்கில் ‘அண்டை அயலாரிடம் எந்த வம்பு தும்பு வெச்சிக்காதே’ என்று சொல்வோம். அண்டை என்பது நமக்கு அடுத்துள்ளது. அயலார் என்றால் நமக்கு அருகே இருந்தாலும், வேறுபட்டு நிற்பவர். நம்மவன் இல்லை, அயலவன். அவனே அயலான். வடமொழியில் இதற்கு நிகரான சொல் ‘அந்நியன்’ எனலாம். 

பல மாதங்களாக நாட்களாக பைனான்ஸ் சிக்கலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவகார்த்திகேயன்ரவிக்குமார் படத்தின் படப்பிடிப்பு, மீண்டும் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில், சிவ கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். அத்துடன் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கிராபிக்ஸ் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு ‘அயலான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக, படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில்  அறிவித்தார்.

இந்நிலையில்  24AM நிறுவனம் தயாரிப்பாளர்  RD ராஜா இது குறித்து, “எங்கள் 24AM நிறுவனம் சார்பில் தயாராகும் அயலான் படத்தின் தலைப்பிற்கு இணையமே கலங்கும், அளவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்திப்பது பெரு மகிழ்ச்சி. மேலும் எங்கள் கோரிக்கையின் பேரில், இசைப்புயல் A R ரஹ்மான் தலைப்பை அறிவித்தது எங்களுக்கு பெருமை. இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே A R ரஹ்மான் அவர்கள் தனது சொந்தப் படம் போல் மிகுந்த ஆர்வத்துடன் செயல் பட்டு வந்தார். எங்களையும் படம் பற்றிய ஒவ்வொரு சிறு வேலைகளிலும் வெகுவாக ஊக்கு வித்தார். தலைப்பிற்காக அவர் உருவாக்கிய ஒரு இசைத்துணுக்கே அபாரமானதாக இருந்தது. அவரது இசை இப்படத்தின் முதுகெலும்பாக இருக்கும்.

“அயலான்” என்பது படத்தின் கருவை மையப்படுத்திய தலைப்பு. அயலான் என்றால் ஏலியன் என்பதும் அர்த்தம். ( Destination earth ) சென்றடையும் இலக்கு பூமி எனக்குறிப்பிடப்பட்டுள்ளதை ரசிகர்கள் எளிதாக  புரிந்து கொள்வார்கள். நாம் அதைப் பற்றி எந்த ஒரு வார்த்தை சொன்னாலும் படத்தின் சுவாரஸ்யங்களை சொல்லிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. இத்தருணத்தில் படத்தின் படப்பிடிப்பு வெகு துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது.

தமிழின் பிரமாண்டமான் அறிவியல் புனைகதை ( சயின்ஸ் ஃபிகஷன் )  படமாக இப்படம் உருவாகிறது. எனவே படத்தில் அதிகளவிலான  விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. அதனை முன்னிட்டு படப்பிடிப்பின் போதே போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் இணையாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் மற்றும் 24AM ஆன எங்கள் நிறுவனத்திற்கு மட்டுமல்லாது தமிழ் சினிமாவிற்கே மிக சிறந்ததொரு பெருமையான படைப்பாக இப்படம் இருக்கும்.

24AM நிறுவனம் சார்பில் RD ராஜா தயாரிக்க KJR Studios நிறுவனர் கொட்டாப்படி J ராஜேஸ் இப் படத்தை வெளியிடுகிறார். பிரமாண்ட அறிவியல் புனைவு படமாக உருவாகும் “அயலான்” இப் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். இவர் களுடன் யோகிபாபு, கருணாகரன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அகாடமி அவார்ட் வின்னர்  A R ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.