August 19, 2022

“ஹீமோகுளோபின் நார்மலாக உள்ளது. ஒன்றும் பிரச்சினையில்லை”. “அப்படியா?? Are you sure?”

ல இளவயது மற்றும் நடுத்தர வயது பெண்கள், டாக்டரிடம் சொல்வார்கள்,

“டாக்டர், அசதியா இருக்கு, கைகால் எல்லாம் முறிக்கிற மாதிரி இருக்கு” என்பார்கள்.

“இது சத்து குறைபாடுமா, Myalgia (தசை வலி). ஒரு நியுரோபயான்(Vit B12) ஊசி போட்டா நல்லாயிடும்” என்பார் டாக்டர்.

ஊசி போட்ட பின் பத்து நாட்கள் நன்றாக இருக்கும். அதன் பின் மறுபடி அதே பிரச்சினை. பிரைவேட் டாக்டரிடம் செல்வோம். அவர் ரத்த டெஸ்ட் எடுப்பார். ஹீமோகுளோபின் பெண்களுக்கு 12 மேல் இருக்க வேண்டும் என்ற கற்றுக்கொடுக்கப்பட்ட நியதிப்படி, அவர் ரிப்போர்டுகளைப் பார்ப்பார். Hb 12 அல்லது 11.5 என்றால், “ஐயர்ன்லாம் நார்மலா தான் இருக்கு, ஒரு நியுரோபயான் போடுவோம்” என அதே கதை சொல்லுவார்.

பிரச்சினை சரியாகாமல், மேடம் மறுபடி இரண்டு வாரம் கழித்து வேறு டாக்டரிடம் போவார். இது தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் காமெடி. ஹீமோகுளோபின் எவ்வளவு இருக்கும் என பார்க்கிறார்களே தவிர, ரத்தத்தில் இரும்புச்சத்து எவ்வளவு உள்ளது என்ற Serum Iron levels யாரும் பார்ப்பதேயில்லை. பார்த்தால் மேட்டர் விளங்கி விடும்.

இந்தியாவில் 70% பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு உள்ளது என்பதை நான் சொல்லவில்லை, Community Medicine எனும் MBBSல் ஐந்து வருடம் சொல்லித்தரப்படும் ஒரு சப்ஜெக்ட் சொல்கிறது. ஹீமோகுளோபின் நார்மல் எனும் லேப் வேல்யூவை வைத்து, “இவருக்கு இரும்புச்சத்து குறைபாடு இல்லை என நினைக்கிரார்கள் டாக்டர்கள். அது தவறு.

இப்படி அறிகுறிகளுடன் வரும் பேஷன்ட்களுக்கு, Serum Iron டெஸ்ட் எடுக்க வேண்டும். கடந்த ஆறு வருடங்களில், 13,000பேருக்கு ஹீமோகுளோபின் மற்றும் Serum Iron ஒரு சேர பரிசோதித்துள்ளேன். ஹீமோகுளோபின் நார்மல் எனக்காட்டும் நூறு பேரில், இருபது பேருக்கு மேல், Serum Iron நார்மலை விட குறைவாக உள்ளது.

இவர்களுக்கு ஜஸ்ட் இரும்பு மாத்திரை தந்தாலே போதும். நார்மலாகி விடுவர்.

இனி ஹீமோகுளோபின் டெஸ்ட் செய்ய வேண்டும் என டாக்டர் சொன்னால், Serum iron டெஸ்டும் சேர்த்து செய்யவும். உங்களுக்கு என்ன பிரச்சினை எனத் தெரிந்து விடும். Serum Ferritin, Transferrin, TIBC, CBC (MCV, MCH, MCHC) போன்ற டெஸ்டுகளாலும் இந்தப் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியும். இன்றைக்கு Orbitoasia, ஆர்த்தி ஸ்கேன்ஸ், மற்றும் தைரோகர் இந்த டெஸ்டுகளை சல்லிசான விலையில் தருகிறார்கள்.

ஞாபகம் இருக்கட்டும், 70% இந்திய பெண்களுக்கு Iron Deficiency anemia உள்ளது, Blooc Hemoglobin லெவல் நார்மலாக இருந்தாலுமே.

Dr. Hariharan. V, MBBS, MD, Diet Consultant, Coimbatore
Whatsapp +919442397845