பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து : ராணுவ தளபதிகள் உட்பட 6 வீரர்கள் மரணம்!

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து : ராணுவ தளபதிகள் உட்பட 6 வீரர்கள்  மரணம்!

பாகிஸ்தான் நாட்டின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன் தினம் இரவு 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். பலுச்சிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிடவில்லை.

இதில் 39 வயது மேஜர் குர்ரம் ஷாஜாத், ராவல்பிண்டியைச் சேர்ந்த 30 வயது மேஜர் முஹம்மது முனீப் அப்சல்மற்றும் 44 வயது சுபேதார் அப்துல் வாகித், 27 வயது முகமது இம்ரான், 30 வயது நாயக் ஜலீல், 35 வயது சோயிப் ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இறந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல் கடந்த ஆகஸ்ட் 1–ந்தேதி லெப்டினன்ட் ஜெனரல் சர்ப்ராஸ் அலி உட்பட ஆறு பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் பலுச்சிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு நாள் கழித்து, ஹெலிகாப்டரின் இடிபாடுகள் மூசா கோத் அருகே கண்டுபிடிக்கப்பட்டன, அதில் பயணம் செய்து அனைவரும் பலியானார்கள். இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

error: Content is protected !!