தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் ; வெளியே தலைக் காட்டாதீங்க!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் ; வெளியே தலைக் காட்டாதீங்க!

க்களைப் பாடாய் படுத்தப் போகும் அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் இருக்கும் நிலையில் சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி 105 டிகிரி வெயில் கொளுத்தியது. 68 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு சென்னையில் வெயில் 106.34 டிகிரியாக அதிகரித்தது. திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களிலும் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர் மாவட்டத்தில் 104 டிகிரியாக பதிவானது. தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கும் எனவும் கூறி உள்ளது.

மேலும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுதவிர, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கடலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் அனல்காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோர் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்த வெளியில் செல்வதையும் வேலை நிமித்தமாக வெளியே செல்வதையும் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

error: Content is protected !!