தமிழ்நாட்டில் வெயில் உக்கிரம் அதிகரிக்கும்!

தமிழ்நாட்டில் வெயில் உக்கிரம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் முழுவதும் வெயில் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த சூழலில் கோடை உச்சமான அக்னி நட்சத்திரம் கடந்த4ம் தேதி தொடங்கியது. இதனால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெப்பச்சலனம் காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த ஒருவாரம் பரவலாக மழை பெய்ததால் வெயில் குறைந்தது. அதன்பின்னர் மழை குறைந்துவிட்டதை அடுத்து இப்போது வெப்பநிலை மீண்டும் அதிகரித்துள்ளது. மேற்கில் வறண்ட காற்று தாக்கம் அதிகமாக இருந்தது. கடல் காற்றும் தாமதமாக உருவானதால் மாநிலம் முழுவதும் வெப்பநிலை இயல்பைவிட 4டிகிரி வரை உயர்ந்தது . அதிக பட்சமாக திருத்தணியில் 112 டிகிரி வெப்பம் பதிவானது. வேலுாரில் 110, சென்னை மீனம்பாக்கத்தில் 108, புதுச்சேரி, கடலுாரில் 107, நெல்லை, சென்னை நுங்கம்பாக்கத்தில் 106, துாத்துக்குடியில் 101, மதுரை ராமநாதபுரத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவானது. கடலோர பகுதிகளில் அனல் காற்று வீசியதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். கோடை விடுமுறை காலத்தில் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

tn heat may 16

வானிலை மைய ஆவணங்கள்படி நாகையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மே மாதத்தில் உச்சபட்ச வெயில் பதிவாகியுள்ளது. இதுபோல, சென்னை, காரைக்கால், வேலுாரிலும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருத்தணியில் பதிவான 112 டிகிரி வெப்பம் தான் இந்தாண்டின் உச்சமாகும். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும். வெப்பநிலை இயல்பைவிட 2டிகிரி வரை உயரும். வட மத்திய மாவட்டங்களில் மட்டும் இடியுடன் அவ்வப்போது மழை பெய்யும். வேலுார், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனல் காற்று தாக்கம் இன்று இருக்கும். எனவே, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அக்னி நட்சத்திரம் உச்சம் அடைந்துள்ளதால் வெயில் கோரம் அதிகரித்துள்ளது. மே இறுதி வரை இந்நிலை நீடிக்கும் என்று ஜோதிடர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!