மூளைக்குத் தேவையான விட்டமின்களை சுரக்க உதவும் ’குஜ்ஜூ சிக்கி’

குஜ்ஜு சிக்கி! (கடலை மிட்டாய்). இந்தக் குறிப்பில் செய்யப் போகும் ஐட்டம் உங்களுக்கானதல்ல! உங்கள் குழந்தைகளுக்கானது! ஒரே ஒரு துண்டு மட்டும் வாயிலே போட்டு டேஸ்ட் பார்க்க அனுமதி உண்டு! நம் வீட்டு ஒவ்வொரு குழந்தையும் திறமையாக இருக்க வேண்டும். ஆரோக்கிய மாக இருக்க வேண்டும். மற்ற குழந்தைகளைவிட படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இதெல்லாம் பெற்றோரின் ஆசைதான். ஆனால், இதையெல்லாம் நடக்க வேண்டுமெனில் குழந்தை யின் மூளை நன்றாக செயல்பட வேண்டும். மூளையின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் குழந்தைக்கு உணவு மூலமாகக் கிடைக்க வேண்டும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு DHA சத்துகள் தேவை. வால்நட், ஃப்ளாக்ஸ் விதைகள், மீன், முட்டை போன்ற உணவுகளில் இருந்து பெறலாம்.

அத்துடன் ஃபோலிக் (folic) ஆசிட் என்னும் ஒரு விதமான அமிலம் இயற்கையாக நமக்கு தாவரங்கள் மூலம் கிடைக்கின்றது! இந்த அமிலத்தினுடைய விசேஷ குணம் என்னவென்றால், மூளைக்குத் தேவையான விட்டமின்களை சுரக்க மிகவும் உதவியாக இருக்கிறது! எனவே ஃபோலிக் ஆசிட் கலந்த எந்த உணவை சாப்பிட்டாலும் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்!

சரி இந்த folic acid எதில் அதிகமாக உள்ளது?

நம்முடைய பாரம்பரிய நிலக்கடலை எனும் கடலைக் கொட்டையில் மிக அதிகமாக இருக்கிறது!

அப்படி என்றால் நாம் தினசரி உபயோகிக்க வேண்டியது பெட்ரோலிய ஓலஃபின் கலந்த ரிஃபைண்ட் ஆயிலா அல்லது நாட்டுச் செக்கு கடலை எண்ணெயா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

போகட்டும்! நீங்கதான் எண்ணெய் விளம்பரத்தைப் பார்த்து உடனே வாங்குகிற ஆளாச்சே! ஏமாறாதீங்க இனிமேல்… மாறுங்கள்! திருந்துங்கள்!

ரெசிபிக்கு வருகிறேன்!

ஒரு கப் தோல் நீக்கிய வறுத்த கடலைக் கொட்டை. மிக்சியில் நைசாக அல்லாமல் தரதரவென்று அரைத்துக் கொள்ளுங்கள். (உடைத்து வறுத்த கடலைக் கொட்டை ஹல்திராமில் கிடைக்கிறது).

கூடவே கால் கப் மைதா மாவு சேர்க்கவும்…

ஒரு கப் சர்க்கரையை ஒரு கப் ஆல்லது ஒண்ணரை கப் தண்ணீரில் போட்டு அடுப்பை மூட்டி கம்பி பதத்திற்கு காய்ச்சவும்…. கூடவே நாலைந்து ஏலக்காயை பொடி செய்து சர்க்கரை தண்ணீரில் போடவும்…

ஒரு வாணலியில் கடலை எண்ணெய் விட்டு கடலைக் கொட்டை மைதா மிக்ஸ் மாவை நன்றாக வறுக்கவும்….

வறுத்த மாவு ஆறட்டும். பின் சர்க்கரைப் பாகை மாவின் நடுவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, மெல்ல கலக்கிக் கொண்டு வரவும்.. ஒரு கட்டத்தில் உப்புமாவிற்கும் அல்வா பதத்திற்கும் இடையே ஒரு சப்பாத்தி மாவு போன்ற ஸ்டேஜ் வரும்போது நிறுத்தி விடவும்…..

ஒரு ஸ்டீல் தட்டில் எண்ணெய் தடவி, அதன் மேல் அல்வா கலவையைக் கொட்டி கையால் மெல்ல மெல்ல தட்டிக் கொடுத்து சமன் செய்து தட்டையாக்கி, தட்டில் பரப்பவும்….

ஒரு கத்தியால் சதுரம் சதுரமாக கீறி விடவும்…. மேலாக நெய் தடவலாம். முந்திரியை பதிக்கலாம்…

இதை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால் கெட்டி ஆகிவிடும்…

பின்னர் வெளியே எடுத்து துண்டுகளை வேறு டப்பாவிற்குள் மாற்றி விடவும்….

கண்டிப்பாக இந்த நிலையில் உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது.

டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!