அனைவரும் தேர்ச்சி என்ற உத்தரவுக்கு தடை போட முடியாது!- ஐகோர்ட் தீர்ப்பு

அனைவரும் தேர்ச்சி என்ற உத்தரவுக்கு தடை போட முடியாது!- ஐகோர்ட் தீர்ப்பு

தமிழ்நாட்டில் தமிழக அரசு 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அதிரடியாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வாய்ப்பில்லை என சென்னை ஐகோர்ட் தெரிவித்து விட்டது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகம் கவலை அடைந்த சூழலில் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நம் நாட்டில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளும் தொடங்கப்பட்டன. ஆனாலும் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-–21ஆம் கல்வியாண்டில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். இது தொடர்பாக அரசு ஆணை வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நந்தகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீபதிகள், அனைவரும் தேர்ச்சி என்ற உத்தரவு தொடர்பாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. அதனால் 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மேலும், 11-ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் கல்வித் தகுதியை கண்டறிய அந்தந்த பள்ளிகள் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!