March 28, 2023

மாதொருபாகன்’ நாவலுக்கு தடையில்லை: ஐகோர்ட் ஆர்டர்

திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சில இந்து மத அமைப்புகள் ‘மாதொருபாகன்’ நாவலின் பிரதிகளை எரித்துப் போராட்டம் நடத்தின. மேலும் எழுத்தாளர் பெருமாள் முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதேவேளையில், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

novel july 5

இதனிடையே, தமிழ் பெண்களை இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள புத்தகங்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியது.

நாமக்கல் மாவட்டம் அமைதிக் குழு சார்பாக கடந்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி இவ்விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்பட்டது. அதில், பெருமாள் முருகன் தன் மாதொருபாகன் நாவலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்க வேண்டும், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவு எட்டப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு ஜனவரி 14-ம் தேதி தான் எழுத்துக்கு முழுக்கு போடுவதாக பெருமாள் முருகன் தனது முகநூல் பக்கம் வாயிலாக அறிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், நாமக்கல் அமைதிக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த சிலர் பெருமாள் முருகன் மீது கிரிமினல் வழக்கு தொடர வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

ஓராண்டு காலமாக நடந்துவரும் இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முக்கிய உத்தரவு பிறப்பித்தனர். அப்போது நீதிபதிகள், “நாமக்கல் மாவட்ட அமைதிக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவு எழுத்தாளர்  பெருமாள் முருகனை கட்டுப்படுத்தாது. அவரது புத்தகம் மாதொருபாகனுக்கு தடையில்லை.  எழுத்தாளர்களின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும். பெருமாள் முருகனிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிப் பெற்றது கண்டிக்கத் தக்கது. அவர் தன் புத்தகத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை”

திருச்செங்கோடு நகர மக்கள் கோருவதுபோல் எழுத்தாளர் பெரு எழுத்தாளர்களின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும். பெருமாள் முருகனுக்கு எதிராக கிரிமினல் நடைமுறைகளுக்கு வாய்ப்பில்லை. எனவே அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்- முதல் தகவல் அறிக்கையும் ரத்து செய்யப்படுகிறது” என்றனர்.

தமிழக அரசுக்கு அறிவுரை:

இது தவிர, இத்தகைய பிரச்சினைகளை அணுகுவது எப்படி என மாநில போலீஸாருக்கு அரசு நிபுணர்க் குழு மூலம் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.